நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இன்ஸ்டாகிராமில் இனி இப்படியும் ரிப்ளை செய்யலாம்..ட்ரை பண்ணி பாருங்க!

 இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இனி படங்கள் அல்லது வாய்ஸ் மெசேஜ் மூலம் பதிலளிக்கும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் வழங்கியுள்ளது.  


  • இன்ஸ்டாகிராம் தற்போது மிகவும் பிரசிதி பெற்று உள்ளது.
  • பேஸ்புக் நிறுவனம் இதனை சொந்தமாக்கி உள்ளது.
  • பயனர்களுக்கு புதிய அப்டேட்களை வழங்குகிறது.

இன்ஸ்டாகிராம் போன்ற பல சமூக வலைத்தளங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்டுகளை வழங்கிக்கொண்டே இருக்கிறது.  அந்தவகையில் தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்களுக்கு வித்தியாசமான முறையில் பதிலளிக்கும் அம்சத்தை வழங்கியுள்ளது.  மெட்டாவிற்கு சொந்தமான இந்த தளமானது பதிலளிப்பதை இரண்டு வழிகளில் செய்ய அனுமதிக்கிறது அதில் ஒருமுறை படங்களை பயன்படுத்தி பதிலளிக்கலாம்,  இரண்டாவது முறையானது வாய்ஸ் மெசேஜ் மூலம் பதிலளிக்கலாம்.  இந்த அம்சமானது ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் என அனைவருக்கும் செயல்படும்.  மேலும் இந்த அம்சங்கள் தற்போது சோதனையில் இருப்பதாகவும், விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.


இந்த செய்தியினை சாஃப்ட்வேர் டெவலப்பர் அலெஸாண்ட்ரோ பலுஸி என்பவர் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள ஸ்க்ரீன்ஷாட்டில் ஸ்டோரிகளுக்கு பதிலளிக்கும் பகுதி காண்பிக்கப்பட்டுள்ளது.  அதில் மேலே எமோஜிகள் உள்ளது, கீழே மெசேஜ் செய்யும் பகுதி உள்ளது அதனருகில் பட ஐகான் ஒன்று உள்ளது.  இதனை மூலம் வாடிக்கையாளர்கள் மொபைலில் கேலரியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை தேர்ந்தெடுத்து பதிலளிக்கலாம், அந்த ஐகானை தொடர்ந்து பக்கத்தில் GIF அனுப்புவதற்கான ஆப்ஷன் உள்ளது.  மேலும் அவர் பகிர்ந்துள்ள இரண்டாவது ஸ்க்ரீன்ஷாட்டில் படம் அனுப்புவதற்கான ஆப்ஷன் இருந்த இடத்தில மைக் ஐகான் உள்ளது, இதன் மூலம் ஸ்டோரிகளுக்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் பதிலளிக்கலாம்.

இவ்வாறு வாய்ஸ் மெசேஜ் செய்யும் ஆப்ஷனில் ஏதேனும் குறிப்பிட்ட கால அளவு நிர்ணயிக்கப்படுமா என்பது குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் தெரியவில்லை.  இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிகளுக்கு பதிலளிக்க அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த அம்சமானது ஏற்கனவே நேரடியாக நாம் மெசேஜ் செய்யும் பகுதியில் உள்ளது.  மெசேஜ் செய்யும்போது நாம் மற்றவருக்கு GIFகள், புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பலாம்.  இருப்பினும் ஸ்டோரிகளுக்கு படங்கள் மற்றும் வாய்ஸ் மெசஜ்கள் மூலம் பதிலளிக்கும் அம்சம் எப்போது வரும் என்பது குறித்த அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் வரும்வரை பழையபடியே பயனர்கள் மெசேஜ் மூலமாகவோ அல்லது ரியாக்ட் செய்வது மூலமாகவோ பதிலளிக்கலாம்.  இவ்வாறு மெசேஜ்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி வாட்ஸ் அப்பிலும் விரைவில் வர உள்ளது, மேலும் இது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு உள்ளதாகவும்  கூறப்படுகிறது.  வாட்ஸ் அப் பீட்டா பயனாளர்களாக இருப்பவர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தியிருக்கலாம்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!