நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சைக்கிளில் சாகசம் செய்யும் பலே இளைஞர்!

 சைக்கிளில் சாகசம் செய்யும் ஒருவரின் வீடியோ டுவிட்டரில் வைரலாகியுள்ளது.


  • சைக்கிளில் சாகசம் செய்யும் ஒருவரின் வீடியோ வைரல்.
  • தலையில் மூட்டையுடன் தடுமாறாமல் ஒரு பயணம்.

கிராமங்களில் வயல் வரப்புகளில் துள்ளி திரியும் ஹீரோயின்களை நாம் ரசித்திருப்போம். பிழைப்பிற்காக வயலுக்கு அடுக்குப் பானைகளில் சோறு கொண்டு செல்லும் பாட்டிகளை நாம் பார்த்திருப்போம். மறுபுறம் நகரங்களில் சர்கஸ் நடத்தப்படும்போது அதில் ஜோக்கர்கள் சைகிள் ஓட்டி பார்த்திருப்போம், கிளி சைகிள் ஓட்டி கூட பார்த்திருப்போம். அதேபோல நம் தெருக்களில் சிறுவர்கள் கைகளைவிட்டு சைகிள் ஓட்டுவதையும் பார்த்திருப்போம்...

ஆனால் இங்கு ஒருவர் தலை மீது அவரது உருவத்தைக் காட்டிலும் மிகப் பெரிய மூட்டை ஒன்றை வைத்துக்கொண்டு இரு கைகளையும் மூட்டையை பிடித்தவாறு செல்கிறார். அதும் நீண்ட தூரம் செல்கிறார். நடந்து அல்ல, சைகிளை மிதித்து. அதிவேகமாக செல்லும் அவரது சைகிள் வளைவுகளில் அருமையாக திரும்புகிறது, கைகளின் உதவி இல்லாமல்.

சற்றும் பிசுறுதட்டாமல் வளைந்து வளைந்து செல்லும் அவரது சைக்கிள் உண்மையிலேயே ஆச்சரியப்படவைக்கிறது.

இவரது இந்த சாகசத்தை பின்னால் வந்த காரில் அமர்ந்தபடி ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் அவரது நேர்த்தியான, நிலை தடுமாறாத சைகிள் ஓட்டும் திறனை பலர் பாராட்டி வந்தால், அந்த ஊர் கவுன்சிலரின்பெருமையைப் பிறர் பாராட்டி வருகின்றனர்.

 

இந்த பதிவை வெளியிட்டவர், "வாழ்க்கை மிகவும் அழகானது ஆனால் நிபந்தனைக்கு உட்பட்டது" என்று எழுதி பதிவிட்டுள்ளார்.



அதற்கு பதிலளிக்கும் விதமாக சிலர், "சீரான ரோடு இருந்தால் வாழ்க்கை அழகானது தான்!" என கமெண்ட் செய்துள்ளது பார்ப்பவர்களின் முகத்தில் புன்னகையைப் பூக்கச்செய்கிறது. ஆகமொத்தம் சைக்கிள் ஓட்டுபவர், ஊருக்கு ரோடு போட்டவர் என இருவரும் பாராட்டுக்கு உரியவர்கள் தான்!


ALSO READ : பறவைகளின் 11 மாடி ‘அபார்மெண்ட்’; நீச்சல் குளமும் அதில் உண்டு..!!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்