உங்களுடைய உதடு கருப்பாக உள்ளதா? இதனை எளிய முறையில் போக்க இதோ சில டிப்ஸ்!
- Get link
- X
- Other Apps
பொதுவாக ஒருவரின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடு முக்கிய பங்கு வகிக்கிறது.
மரபியல் காரணம் ரத்தசோகை அதிகமாக காபி, டீ குடிப்பது ஈட்டிங் டிஸ்ஆர்டர் லிப் மேக்கப்பை முறைப்படி நீக்காதது போதிய நீர்ச்சத்து, அலர்ஜி, சூரிய கதிர்களின் தாக்கம் விட்டமின் குறைபாடு அதிகமான இரும்புச்சத்து உடலில் இருப்பது, மருந்துகள் ஹார்மோன் பிரச்னை உதடு பராமரிப்பின்மை ஆகிய காரணங்களால் உதடு கருப்பாகிறது.
இதனை நீக்க அதிக செலவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- பொடித்த சர்க்கரை – 1/2 ஸ்பூன்
- மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன்
- எலுமிச்சை பழச்சாறு – 1/4 ஸ்பூன்
- தேன் – 1/4 ஸ்பூன்
செய்முறை
- முதலில் மேல் சொன்ன பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு ஸ்பூனை வைத்து கலந்து பேஸ்ட் போல தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணியாக இதை தயார் செய்ய வேண்டாம். தேவைப்பட்டால் லெமன் ஜூஸை கொஞ்சம் குறைத்துக் கொண்டாலும் பரவாயில்லை.
- இந்த பேஸ்ட்டை முதலில் உங்களது விரல்களால் தொட்டு, உங்களுடைய உதட்டை கொஞ்சம் அழுத்தம் கொடுத்து ஸ்கரப் செய்து மசாஜ் செய்யவேண்டும்.
- நிமிடங்கள் இப்படி செய்தால் போதும். ரொம்பவும் அழுத்தம் கொடுத்து ஸ்க்ரப் செய்யக்கூடாது. ரொம்பவும் லேசாகவும் செய்யக்கூடாது. ஜென்டில் மசாஜ் செய்ய வேண்டும்.
- அதன்பின்பு ஒரு காட்டன் துணியை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து உங்களது உதடுகளை லேசாக அழுத்தம் கொடுத்து துடைத்து எடுத்தால், உதட்டில் இருக்கும் டெட் செல்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
- மீண்டும் மிச்சமிருக்கும் பேஸ்டை உங்களது விரல்களால் லேசாகத் தொட்டு உதட்டின் மேல் பேக் போட்டுக் கொள்ளுங்கள்.
- இது 10 நிமிடங்கள் அப்படியே காய விட்டு விட்டு, குளிர்ந்த நீரை கொண்டு உதடுகளை கழுவி விட்டால் போதும். உடனடியாக உங்கள் உதட்டில் இருக்கும் கருமை நிறம் குறைவதை உங்களாலேயே உணர முடியும்.
குறிப்பு
தினமும் உதட்டை ஸ்கரப் செய்து மசாஜ் செய்ய வேண்டாம். 10 நாட்களுக்கு ஒரு முறை உதடை ஸ்க்ரப் செய்து கொண்டு, தினமும் இதை பேக்காக மட்டும் போட்டுக் கொண்டால் போதும்.
பேக்கை மீதம் எடுத்து வைத்து எல்லாம், அடுத்த நாள் உபயோகப்படுத்தக் கூடாது. தினம்தினம் புதியதாக தான் பேக் தயார் செய்து கொள்ள வேண்டும்.
ALSO READ : கண்களை அழகுப்படுத்த மஸ்காராவை பயன்படுத்துவது எப்படி?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment