நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொலஸ்ட்ரால் அதிகமானால், இந்த 3 பாகங்களில் மாற்றம் தெரியும்: எச்சரிக்கை தேவை

 High Cholesterol Symptoms: கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​​உடலின் மூன்று பாகங்களில் மாற்றங்கள் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கண்கள், காதுகள் மற்றும் தோல் ஆகியவை இதில் அடங்கும்.


  • அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள்.
  • இந்த மாற்றங்கள் உடலில் ஏற்படும்.
  • அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தாகலாம்.

ந்நாட்களில் கொலஸ்ட்ரால் பிரச்சனை அனைவருக்கும் உள்ள பிரச்சனையாக உள்ளது. மோசமான வாழ்க்கை முறையால் கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாகிறது. 

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த அனைத்து வகையான முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன. ஆனால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது சிலருக்குத்தான் தெரிகின்றது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் உடலின் 3 பாகங்களில் மாற்றங்கள் காணப்படுகின்றன என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும். 

கொலஸ்ட்ரால் இரண்டு வகைப்படும்

தோலில் வரும் மாற்றங்கள் அதிகரிப்பது கொலஸ்ட்ராலின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக நம்பப்படுகிறது. கொலஸ்ட்ரால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்தத்தை கொண்டு செல்லும் வேலையை செய்கிறது. கொலஸ்ட்ரால் இரண்டு வகைப்படும். குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் அதிக அடர்த்தி கொழுப்புப்புரதம் நல்ல கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படும். கெட்ட கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களில் பிளேக் குவிவதற்கு காரணமாகிறது. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

இந்த காரணங்களால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது

உணவில் உள்ள அதிகமான டிரான்ஸ் கொழுப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், மனித உடலில் கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகரிக்கிறது என்று நம்பப்படுகிறது. இதனுடன் உடல் பருமன், புகைபிடித்தல் மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை தெரிவிக்கும் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது அவசியம்:

- கொலஸ்ட்ரால் அதிகரித்தால், கண்களிலும் மாற்றங்கள் தொடங்குகின்றன. கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​​​​நோயாளிகளின் கண்ணின் கார்னியாவின் வெளிப்புற பகுதிக்கு மேலே அல்லது கீழே ஒரு நீல அல்லது வெள்ளை குவிமாடம் போன்ற ஒன்று காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தால், நீங்கள் நிச்சயமாக உங்கள் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

- இது தவிர, உங்கள் சருமத்தின் நிறம் மாறத்துவங்கினால், கொஞ்சம் கவனமாக இருங்கள். ஏனெனில் இதுவும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறியாகும்.

- உங்கள் கைகளில் வலி இருந்தால், நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி கை வலி ஏற்படுவது உடல் ஆரோக்கியத்துக்கு சரியான அறிகுறி அல்ல என்று நம்பப்படுகிறது. இதுவும் அதிக கொலஸ்ட்ராலுக்கான அறிகுறியாக இருக்கலாம்.


also read : உடல் எடையை குறைக்கணுமா? இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்