நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆக்சிஜன் அளவை தெரிந்து கொள்ள உதவும் 5 ஆன்டிராய்டு, iOS செயலிகள்!

ஆக்சிமீட்டர் இருந்தால், உடலில் இருக்கும் ஆக்சிஜன் அளவை அறிந்து கொள்ள முடியும். இது கிடைக்காதவர்களுக்கு ஆன்டிராய்டு மற்றும் iOS செயலிகள் மூலம் ஆக்சிஜன் அளவை அறிந்துகொள்ளலாம்.
கோவிட் வைரஸ் பரவலால் நாடு முழுவதும் மருத்துவ உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலரும் உயிரிழந்த நிலையில், சந்தையில் விற்பனையான ஆக்சிமீட்டர்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மேலும், தட்டுப்பாடு ஏற்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 95 விழுக்காட்டுக்கும் குறைவாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் சுவாச பாதிப்பு ஏற்படும்.

ஆக்சிமீட்டர் இருந்தால், உடலில் இருக்கும் ஆக்சிஜன் அளவை அறிந்து கொள்ள முடியும். இது கிடைக்காதவர்களுக்கு ஆன்டிராய்டு மற்றும் iOS செயலிகள் மூலம் ஆக்சிஜன் அளவை அறிந்துகொள்ளலாம். கேமரா மற்றும் செல்போன் லைட் மூலம் ஆக்சிஜன் அளவை கணக்கிடும், 5 செயலிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

கேர்பிளிக்ஸ் விட்டல்ஸ் (CarePlix Vitals)

கொல்கத்தாவைச் சேர்ந்த கேர் நவ் ஹெல்த்கேர் ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த செயலி கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டாரில் கிடைக்கிறது. இமெயில் ஐடி மூலம் பதிவு செய்ய வேண்டும். தொலைபேசியின் பிளாஷ் லைட் மூலம் உடலின் ஆக்சிஜன் அளவைக் கணக்கிடுகிறது. சோதனையின்போது, மெடிக்கல் ஸ்டோரில் இருந்த 2 வெவ்வேறு கம்பெனிகள் பதிவுகளுடன் ஒப்பிடும்போது, இந்த செயலி துல்லியமான அளவை பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எம்.பைன் (MFine)

ஆன்டிராய்டு செல்போன்களில் மட்டும் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள எம்.பைன் செயலி, பயனாளர்களை ஆன்லைன் மூலம் மருத்துவரிடமும் இணைக்கிறது. இந்த செயலி மூலம் ஹோம் டெஸ்டிங் மற்றும் மெடிக்கல் சர்வீஸ்களை பெற முடியும். ஆக்சிஜன் லெவலை கேமரா மற்றும் பிளாஷ் லைட் உதவியுடன் அளவிட்டு கூறுகிறது. ஆக்சிமீட்டர்களுடன் ஒப்பிடும்போது, இதன் முடிவுகள் ஏறத்தாழ ஒத்திருந்தது.

பிளட் ஆக்சிஜன் (Blood Oxygen)

பிளட் ஆக்சிஜன் செயலி ஆப்பிள் ஸ்டோரில் மட்டுமே உள்ளது. ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் லெவல் மற்றும் இதயத் துடிப்பு ஆகியவற்றை பதிவு செய்கிறது. சுவாச முறையை மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றும் வகையில் ஆக்சிஜனை அளவிடுகிறது. ஆக்சிஜன் அளவை தெரிந்து கொள்வதற்காக இந்த செயலில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தனிப்பட்ட உபயோகத்துக்கு மட்டுமே பிளட் ஆக்சிஜன் செயலி பயன்படுத்தப்படுகிறது.

பல்ஸ் ஆக்சிமீட்டர் டிராக்கர் (Pulse Oximeter Tracker)

ஆன்டிராய்டு போன்களில் மட்டுமே உபயோகப்படுத்தக்கூடிய பல்ஸ் ஆக்சி மீட்டர் செயலி ஆக்சிஜன் அளவை அறிந்து கொள்வதற்காக ஏறத்தாழ 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜன் அளவை கண்காணிக்காது என்றாலும், டேட்டாவை தொடர்ந்து பதிவு செய்திருக்கும். அதனை வைத்து ஆக்சிஜன் அளவை தெரிந்து கொள்ளலாம்

இ.இசட் விட்டல்ஸ் (Ezvitals)

பல்ஸ் ஆக்சிமீட்டர் டிராக்கரை போலவே இந்த செயலியும் ஆக்சிஜன் அளவை பதிவு செய்யாது என்றாலும், ஆக்சி மீட்டரில் பதிவாகியிருக்கும் தகவல்களை சேகரித்து வைக்கப் பயன்படும். கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் என இரு பார்மேட்களிலும் கிடைக்கிறது. உடல் தொடர்பான தகவல்களை, மருத்து ஆலோசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. ஆபத்து காலங்களில் இந்த செயலியின் தரவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என அந்த நிர்வாகம் கூறியுள்ளது.

மேற்கூறிய செயலிகள் அனைத்தும் அந்தந்த நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. செயலிகள் கொடுக்கும் தகவல்களை அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளாமல், முன்னெச்சரிக்கைக்காக பயன்படுத்தி, நேரடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்