நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வேகமாக சென்ற போது பிரேக் ஃபெயிலியரான டிரக்.! சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவர்.. என்ன செய்தார்.?

பிரேக்குகள் செயலிழந்த பின்னரும் சுமார் 3 கி.மீ தொலைவு டிரக்கை ஓட்டி சென்றுள்ள டிரைவர் ஒருவர், யார் மீதும் வண்டியை மோதி விபத்து ஏற்படுத்தி விடாமல் பத்திரமாக நிறுத்தி உள்ளார்.
சமீப நாட்களாக இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் பெரிய டிரக் ஒன்று சுமார் 3 கி.மீ தூரம் ரிவர்ஸிலேயே ஓட்டி செல்லப்படும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

முதலில் டிரக் டிரைவர் ஆபத்தான முறையில் வேண்டுமென்றே வாகனத்தை ரிவர்ஸில் ஒட்டி செல்வதாக பலரும் கருதினர். ஆனால் இதன் பின்னணியில் பெரும் விபத்தை தடுக்க அந்த டிரக் டிரைவரின் விவேகமான நடவடிக்கை உதவியுள்ளது என்ற தகவல் பலரையும் நெகிழ செய்துள்ளது.

சாலையில் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று பிரேக் ஃபெயிலியர் ஆகிவிட்டாலே வாகனத்தை ஓட்டி கொண்டிருப்பவர் பதற்றமின்றி பைக்கை நிறுத்துவது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஆனால் பிரேக்குகள் செயலிழந்த பின்னரும் சுமார் 3 கி.மீ தொலைவு டிரக்கை ஓட்டி சென்றுள்ள டிரைவர் ஒருவர், யார் மீதும் வண்டியை மோதி விபத்து ஏற்படுத்தி விடாமல் பத்திரமாக நிறுத்தி உள்ளார்.

அதுவும் சாதுர்யமாக ரிவர்ஸ் கியரிலேயே டிரக்கை சுமார் 3 கி.மீ தூரம் இயக்கி விபத்து எதுவும் ஏற்படாமல் செயல்பட்டுள்ளார். மகாராஷ்டிராவின் ஜல்னா - சில்லோட் (Jalna – Sillod) சாலையில் நடந்த இந்த வினோதமான சம்பவம் டிரான்ஸ்போர்ட் லைவ் என்ற யூடியூப் சேனலில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.



இந்த சம்பவம் குறித்து வெளியான தகவல்களின் படி, குறிப்பிட்ட டிரக்கை ஓட்டி வந்த டிரைவரால் டிரக்கின் ஃபர்ஸ்ட் அல்லது செகண்ட் கியரை பயன்படுத்த முடியவில்லை. ஏனெனில் அந்த கியர்களில் இயக்க டிரக் நிலையானதாக இருக்க வேண்டும். சாலையில் சென்று கொண்டிருந்த டிரக் நிலையாக இல்லாததால், டிரைவரால் மேற்கண்ட இரு கியர்களில் வண்டியை செலுத்த முடியவில்லை.

இதனை அடுத்து சாலையில் சென்று கொண்டிருக்கும் பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீது விபத்து ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்த அந்த டிரக் டிரைவர் சமயோஜிதமாக செயல்பட்டு டிரக்கை நிறுத்த பாதுகாப்பான வழியை கண்டறியும் வரை டிரக்கை மெதுவாக ரிவர்ஸ் கியரில் இயக்கி கொண்டே செல்லலாம் என்று முடிவெடுத்து அதன்படியே டிரக்கை ரிவர்ஸிலேயே ஓட்டி சென்றுள்ளார்.

அந்த வீடியோவில் நாம் ஏராளமான பைக்கர்களை பார்க்க முடிகிறது. அவர்களில் சிலர் டிரக்கின் நிலைமை குறித்து எச்சரித்து டிராபிக்கை கிளியர் செய்ய உதவினார்கள்.

சிறிய வண்டிகளின் டயர்களுடன் ஒப்பிடும்போது பெரிய டயர்கள் மிக எளிதாக, வேகமாக ஓடும் என்பதால் ரிவர்ஸ் கியரில் செல்லும் போது கூட டிரக்கின் வேகம் குறையவில்லை. கடைசியாக, ஓட்டுநர் ஒரு திறந்த பண்ணையை ஒன்றை பார்த்தார். இதை அடுத்து டிரக்கின் ஸ்டீயரிங்கை அந்த பண்ணையை நோக்கி திருப்பினார். பண்ணையின் கரடுமுரடான மேற்பரப்பு டிரக்கின் வேகத்தை மெதுவாக்க உதவியது.

இறுதியாக கடும் முயற்சிக்கு பின் டிரக்கை வெற்றிகரமாக நிறுத்தினார் அந்த டிரைவர். கார் போன்ற அதிநவீன அம்சங்கள் இல்லாத பெரிய கனரக வாகனமான டிரக்கை விபத்தில் சிக்க வைக்காமல், தனது உயிரை பணயம் வைத்து ரிவர்ஸிலேயே வண்டியை ஒட்டி சாமர்த்தியமாக மற்றும் துணிச்சலாக செயல்பட்ட டிரைவரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்