நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆவி பிடிக்க உதவும் நொச்சி இலை..அதன் அளவில்லா நன்மைகளை பற்றி தெரியுமா உங்களுக்கு...?

ஆவி பிடித்தலில் பயன்படுத்தப்படும் மூலிகையில் முதன்மையானது நொச்சி இலை. இந்த நொச்சி இலையில் இருக்கும் அற்புதமான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை.
ஆயுர்வேதம் , சித்த மருத்துவத்தில் ஆவிப்பிடிப்பது சிறந்த மருத்துவமாக பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் வீட்டு மருத்துவத்தில் ஆவி பிடித்தல் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. இந்த ஆவி பிடித்தலில் பயன்படுத்தப்படும் மூலிகையில் முதன்மையானது நொச்சி இலை. இந்த நொச்சி இலையில் இருக்கும் அற்புதமான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. ஏனெனில் அதன் பயன்பாடு கிராமங்களைத் தாண்டி இன்னும் அதிகரிக்கவில்லை. இதனால் சென்னையில் சில இடங்களில் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
நீர் நிலைகளில் காணப்படும் நீர்நொச்சி, ஐந்து இலை கொண்ட நொச்சி, கருநிற இலைகள் கொண்ட நொச்சி என மூன்று வகைகளில் காணப்படுகிறது. இந்த நொச்சி இலையின் தாவரவையல் பெயர் Vitex negundo என்று அழைக்கப்படுகிறது. இந்த கரு நொச்சிதான் அதிக மருத்துவப் பலன் கொண்டது. ஆனால் இது காட்டுப்பகுதி, மலைப்பகுதிகளில் மட்டுமே அரிதாக கிடைக்கிறது. இதன் வளர்ப்பு குறைந்துவிட்டது.
இந்த நொச்சி இலைகளில் ஒவித நறுமண வாசனை இருக்கிறது. அவைதான் சுவாசப்பாதையை சீராக்கி நன்மை அளிக்கிறது. எனவேதான் கடுமையான நெஞ்சு சளி, இருமல் இருப்பவர்களுக்கு கொதிக்க வைத்த தண்ணீரில் நொச்சி இலை சேர்த்து ஆவி பிடிக்க சொல்கின்றனர். இதனுடன் கற்பூரவல்லி அல்லது துளசி சேர்த்து ஆவி பிடிக்கலாம்.
நொச்சி இலை போட்டு கொதிக்க வைத்த நீரை குளிக்க பயன்படுத்தினாலும் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.

தீராத தலைவலியால் அவதிப்படுகிறீர்கள் எனில் நொச்சியின் காய்ந்த இலைகளை முகைமூட்டி அந்த புகையை சுவாசிக்க தலைவலி தீரும். ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள் இதை தவிர்க்கவும். மற்றொரு வழியாக நொச்சி இலையைக் கசக்கி தலையில் வைத்துக் கட்டினால் தலைப்பாரம் குறையும்.

கருநொச்சி இலைகளின் சாறு, சீதப்பேதி, உடல் பலவீனம், அஜீரணம், மந்தமாகச் செயல்படும் ஈரல், நரம்பு வலி, செரிமானம், ஆகியவற்றுக்குப் பயனளிக்கிறது.

உடலில் ஏதேனும் கட்டி, வீக்கம் இருப்பின் நொச்சி இலைகளை வதக்கி வீக்கங்களுக்கும் கட்டிகளுக்கும் கட்ட அவை கரைந்து போகும்.இன்றைக்கும் கிராமங்களில் இந்த வழக்கம் இருந்துதான் வருகிறது. ஏனெனில் நொச்சி பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து வலி, வீக்கத்தை குறைக்கிறது. இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

கை, கால் முட்டி வலிக்கும் நொச்சி இலையை கசக்கி துணி வைத்து கட்டிக்கொள்ள வலி குறையும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்