நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குறைந்த ஆயுளை கொண்ட, இரட்டை தலையுடன் கூடிய அரிய நீர்பாம்பு;

ஈராக் நாட்டில் இரட்டை தலையுடன் கூடிய விஷமற்ற, அரிய வகை நீர்பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
பாக்தாத்,

ஈராக் நாட்டின் சுலைமானி மாகாணத்தில் குர்திஸ்தான் பகுதியில் கத்ரி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் முகமது மக்மூத். இவர் கூறும்பொழுது, கடந்த 30 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் எங்களுடைய நிலத்தில் நான் பண்ணை விவசாயம் செய்து வருகிறேன்.

அதில் நீரோடையில் இரட்டை தலையுடன் உள்ள பாம்பு ஒன்று சென்றது. ஓடையில் நீர் அதிகம் இல்லை. அதனால், அதனை உயிருடன் பிடித்து கொண்டு வீட்டிற்கு எடுத்து சென்றேன் என கூறியுள்ளார்.

இந்த வகை பாம்பு விஷமற்றது. 80 கிராம் எடையுடன், 8 அங்குலம் வரை வளர கூடியது என கூறப்படுகிறது. முகமது எடுத்து சென்ற பாம்பு ஒரு வயதுக்கு குறைவாகவே இருக்கும். அவை நீர்வாழ் பாம்பு வகையை சேர்ந்தது. நீரிலும், நிலத்திலும் வாழ கூடிய தன்மை கொண்டது என்றாலும் அதிக வெப்ப நிலையை அவற்றால் ஏற்க முடியாது.

லட்சக்கணக்கான பாம்புகளில் ஒன்று என்ற கணக்கில் இரட்டை தலையுடன் கூடிய பாம்பு பிறக்கும். இவற்றுக்கு குறைவான ஆயுளே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!