நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளி உலகின் நெ.1 பணக்காரர் ஆனார் பெர்னார்ட் அர்னால்ட்... யார் இவர்?

லூயிஸ் உய்ட்டன் நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட்டின் தற்போதைய சொத்து மதிப்பு 186.3 பில்லியன் டாலர்களாக உள்ளது.
அமேசான் நிர்வாக அதிகாரி ஜெஃப் பைசோஸை பின்னுக்கு தள்ளி உலகின் நெ.1 பணக்கார் ஆனார் லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட்..

கொரோனா பேரிடர் மற்றும் ஊரடங்கு காரணங்களால் உலக வர்த்தகத்தில் ஏற்றம் இறக்கங்கள் மாறி மாறி நிலவுகிறது. பல நாடுகளில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளதால் இ-வணிக சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இ-வணிக சேவையின் முன்னணி நிறுவனமான அமேசான் பங்குகள் சரிவுகளை சந்தித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அமோசனின் விற்பனை சரிந்துள்ளதால் நீண்ட நாட்களாக உலக பணக்கார்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அந்த நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பைசோஸ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

அதே நேரம் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள சீனா உள்ளிட்ட நாடுகளில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கு அதிகம் ஆர்வம் காட்டியதால் லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு கடந்த சில மாதங்களாக அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது.

லூயிஸ் உய்ட்டன் நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட்டின் தற்போதைய சொத்து மதிப்பு 186.3 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக 186 பில்லியன் டாலர் உடன் ஜெப் பைசோஸ் 2வது இடத்தில் உள்ளார். 3வது இடத்தில் 147.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் உள்ளார்.

லூயிஸ் உயிட்டன் நிறுவனம் பல ஆடம்பர பிரண்ட்களை தன்வசம் வைத்துள்ளது. பென்டி, டியோர், கிவென்சே போன்ற பல முன்னணி பிராண்டுகளை லூயிஸ் உயிட்டன் நிறுவனம் தான் தலைமை வகிக்கிறது என்பது குறிப்பிடதக்கது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்