நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பல வகை கொரோனாவுக்கும் தடுப்பூசிகள் பலன் தரும் - ஆய்வு முடிவு

பல வகை கொரோனா வைரஸ் தொற்றுகள் காணப்பட்டாலும், அனைத்துக்கும் தடுப்பூசிகள் பலன் தரும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
லண்டன்:

சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் உருவானது. ஆனால் இது தொடர்ந்து உருமாறி புதிய வகை கொரோனாக்களாக பரவுகின்றன.

அந்த வகையில் உருமாறிய கொரோனாக்கள் பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் பி117, தென் ஆப்பிரிக்காவில் பி1351, பிரேசிலில் பி1, இந்தியாவில் பி16172 கொரோனாக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த உருமாறிய கொரோனாக்கள் அனைத்தும் அதிவேக பரவும் திறனைக்கொண்டுள்ளன.

இப்படி பல வகை கொரோனாக்கள் கண்டறியப்பட்டாலும் அவை அனைத்துக்கும் எதிராக தடுப்பூசிகள் பலன் அளிக்கும் என தெரியவந்துள்ளது.

கத்தார் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, பி117 வகை கொரோனாவுக்கு எதிராக பைசர், பயோ என்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசி 90 சதவீத செயல்திறனைக் கொண்டிருப்பதாக கூறுகிறது.

பைசர், பயோஎன்டெக் நிறுவனங்களின் தடுப்பூசியும், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியும் பி16172 வகை கொரோனாவுக்கு எதிராக முறையே 88 சதவீதம், 60 சதவீதம் செயல்திறனைக் கொண்டுள்ளன என இங்கிலாந்து சுகாதார துறை ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இந்த பகுப்பாய்வுகள், தொற்றுநோய்க்கான ஆபத்துடன் தொடர்பு உடையவை ஆகும். இருப்பினும், ஒரு தடுப்பூசி மூலம் மாறுபடும் சாத்தியக்கூறுகள் வரும்போது, மிக முக்கியமாக எழுகிற கேள்வி- யாரோ ஒருவர் பாதிக்கப்படுகிறாரா என்பதல்ல, அந்த தொற்று கடுமையான நோய்த்தாக்குதல் அல்லது மரணத்துக்கு வழிநடத்துகிறதா என்பதுதான்.

தடுப்பூசியின் வேலை, கடுமையான நோய்த்தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதாகும். இதுவரை கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள முக்கிய தடுப்பூசிகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட கொரோனாவுக்கு எதிராக செயல்படுகிற வேலையைச் செய்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!