நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காய்ச்சல் , சளி இருக்கும்போது இந்த மாதிரியான உணவுகளை சாப்பிட்டால் பெட்டரா ஃபீல் பண்ணுவீங்க..!

காய்ச்சலின் போது ஜீரண சக்தியின் வேகம் குறைவாக இருக்கும். எனவே அந்த சமயத்தில் விரைவில் ஜீரணிக்கக் கூடிய அதேசமயம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவத் அவசியம்.
இளநீர் : இளநீரில் உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய குளுக்கோஸ், எலக்ட்ரோலைட்ஸ் நிறைவாக உள்ளன. அதேசமயம் அவை உடலுக்கு நீர்ச்சத்தை அதிகரித்து ஹைட்ரேட்டாக வைத்துக்கொள்ள உதவும்.

கிச்சடி : காய்கறிக் கலவையில் எளிமையாக ஜீரணிக்கக் கூடிய உணவு. இதில் ஊட்டசத்தும் நிறைவாக இருக்கும். காச்சலின் போது சாப்பிடுவதற்கும் நல்ல உணவாக இருக்கும்.

வேக வைத்த முட்டை : முட்டை புரோட்டின் சத்து நிறைந்தது. காய்ச்சலின் போது புரோட்டீன் அவசியம் என்பதால் முட்டையும் அவசியம்தான். அதோடு முட்டையில் விட்டமின் பி6 மற்றும் பி12 இருப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். காய்ச்சலின் போது நல்ல உணவாகவும் இருக்கும்.

சூப் : தொண்டை வலிம் , சளி, காய்ச்சல் , இருமல் இப்படி எதுவாக இருந்தாலும் சூடான சூப் இதமாக இருக்கும். காய்கறி அல்லது சிக்கன் சூப் எதுவாயினும் அது ஊட்டச்சத்து மிக்கதாகத்தான் இருக்கும். இது ஜீரண சக்திக்கு ஏதுவாகவும் இருக்கும். திட உணவு ஏற்றுக்கொள்ளவில்லை எனில் ஆரோக்கியம் நிறைந்த சூப் நல்ல தேர்வாக இருக்கும்.

உப்புமா : ரவை , ராகி, சம்பா, கோதுமை அல்லது சேமியா இப்படி எந்த வகை உப்புமாவாக இருந்தாலும் காய்ச்சலின் போது பெஸ்ட் உணவாக இருக்கும். அதோடு காய்கறிகளு கலந்து சமைத்தால் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும். இது காய்ச்சலின் போது உண்டாகும் மலச்சிக்கலையும் தவிர்க்க உதவும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்