நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மக்கள் வரி பணத்தைப் பயன்படுத்தி குடும்பத்தின் காலை உணவுக்கு மாதந்தோறும் ரூ.26,000 செலவு செய்யும் பின்லாந்து பிரதமர்!

ஆட்சியில் உள்ள உலகின் இளம் பிரதமர் என்ற பெருமையும் சன்னா மரின்-க்கு உண்டு.
மக்கள் வரி பணத்தை குடும்பத்தினரின் காலை உணவுக்காக செலவு செய்து வருவதாக பின்லாந்து பிரதமர் மீது ஒரு குற்றசாட்டு தற்போது எழுந்துள்ளது.

பின்லாந்து நாட்டின் பெண் பிரதமரான சன்னா மரின் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான கேசரந்தாவில் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தின் காலை உணவுகளுக்காக மாதத்திற்கு சுமார் 300 யூரோக்களை (அதாவது 365 அமரிக்க டாலர்கள்) திரும்பக் கோருவதாக கடந்த செவ்வாயன்று (மே.25) டப்லாய்டு இல்தலேஹெட்டி செய்தித்தாளுக்கு தகவல் கிடைத்த பிறகு, பிரதமர் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில் வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்தி பிரதமரின் காலை உணவுக்கு சட்டவிரோதமாக மானியம் வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரிப்பதாக பின்லாந்து காவல்துறை கடந்த வெள்ளிக்கிழமை (மே.28) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்நாட்டில் பூதாகரமாக வெடித்த இந்த சம்பவத்தால், எதிர்க்கட்சி தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த சம்பவம் பிரதமரின் முகத்தில் முட்டை வீசியதற்கு சமம் என்றும், 35 வயதான அரசாங்கத் தலைவர் தனது குடும்பத்திற்கும் மிகைப்பலன் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமராக, நான் எந்த விதமான நன்மையையும் கேட்கவில்லை அல்லது அதை தீர்மானிப்பதில் ஈடுபடவில்லை" என்று பிரதமர் மரின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்நாட்டு ஊடகவியலாளர்கள் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த போது, பிரதமரின் காலை உணவுக்கு வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்துவprimeprimeது உண்மையில் பின்னிஷ் சட்டத்திற்கு முரணாக இருக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளனர். இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கான கோரிக்கையைப் பெற்ற பின்னர், போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை, ஒரு பொது-அலுவலக குற்றம் தொடர்பான ப்ரீ-ட்ரையல் விசாரணையை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து போலீசார் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "பிரதமருக்கு தனது குடும்ப உணவுகளுக்காக ரீஇம்பெர்ஸ்மென்ட் என்ற பெயரில் பணம் திருப்பி செலுத்தப்படுகிறது. ஆனால் அமைச்சர்கள் சட்டத்தின் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகள் குறித்த சட்டத்தின் சொற்கள் இதை அனுமதிப்பதாக தெரியவில்லை." என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் துப்பறியும் கண்காணிப்பாளர் டீமு ஜோகினென் கூறியிருப்பதாவது, " பிரதமரின் அலுவலகத்திற்குள் இருக்கும் அதிகாரிகளின் முடிவுகள் குறித்து விசாரணை கவனம் செலுத்தும் என்றும், இது எந்த வகையிலும் பிரதமரையோ அல்லது அவரது உத்தியோகபூர்வ நடவடிக்கைகளையோ தொடர்புபடுத்தாது என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் மரின் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், விசாரணையை வரவேற்பதாகவும், குற்றம் நிரூபிக்கப்படும் போது அதன் நன்மைகளை கோருவதை தான் நிறுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் மரின் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவிக்கு வந்ததிலிருந்து ஒப்பீட்டளவில் அதிக மக்களின் ஆதரவை பெற்று வருகிறார்.

மேலும் ஐரோப்பாவின் மிகக் குறைந்த கொரோனா வைரஸ் தொற்று வீதங்களை பராமரிக்கும் ஒரே நாடு என்ற பெயரையும் பெற்றுத்தந்தவர் இவர். ஆட்சியில் உள்ள உலகின் இளம் பிரதமர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!