நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நோய்களை எல்லாம் துரத்தி அடிக்கும் ஜூஸ்! எது தெரியுமா?

அம்பரலங்காய், இது பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இந்த மரத்தின் இலைகள், பட்டை என எல்லாமே மருத்துவ ரீதியாக பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

அத்துடன் ஆயுர்வேத சிகிச்சை முறையில் அம்பரலங்காய் என்பது மிக முக்கியமான ஒன்று என சொல்லலாம். வயிற்றுப்போக்கு, தொண்டை புண், இருமல், கண் தொற்று, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு எல்லாம் இது தீர்வளிக்கிறது.

அம்பரலங்காயில் வைட்டமின் A அதிகமாக உள்ளது. இது கண் பார்வை திறனை மேம்படுத்துகிறது. அம்பரலங்காய் மரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் சாறு கண் ஒவ்வாமைகளுக்கும் கண் சார்ந்த பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

அம்பரலங்காயில் அதிக அளவு வைட்டமின் C உள்ளது.இது உடலில் உள்ள கொழுப்பைகுறைத்து வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. அம்பரலங்காயில் செரிமானத்தைத் தூண்டும் நார்ச்சத்து இருப்பதால் அஜீரணம் மற்றும் செரிமானம் சார்ந்த பிரச்சினைகளை அம்பரலங்காய் குணப்படுத்துகிறது.
அத்துடன் உடலில் ஏற்படும் நீரிழப்புப் பிரச்சினையைச் சரிசெய்யும் திறன் இந்த அம்பரலங்காய்க்கு உண்டு. இதில் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் கலோரிகள் குறைவாகவே உள்ளன. ஆனால், இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே, இந்த பழம் அதிக உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.

இது உடல் செல்களை நச்சுகள் மற்றும் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் சரும பாதிப்பு ஏற்படாமல் தடுத்து இளமை தோற்றத்தை நீடிக்கச் செய்து சருமத்திற்குப் பொலிவைத் தருகிறது.

இதில் உள்ள வைட்டமின் C உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. அம்பரலங்காயில் உள்ள வைட்டமின் B1 சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.

erஇது உடலில் இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதன் மூலம் உடல் முழுவதும் ஆக்ஸிஜனின் ஓட்டத்தைத் தூண்டுகிறது. அதுமட்டுமல்லாமல் அம்பரலங்காய் இருமலுக்கு ஒரு சிறந்த மருந்து என கூறப்படுவதுடன் தொண்டை புண்ணைக் குணமாக்கி குரலில் ஏற்படும் பிரச்சினைகளையும் சரிசெய்கிறது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!