உடற்பயிற்சியை ஆரம்பிப்பது எளிது. ஆனால் அதனை நீண்ட நாள் கடைப்பிடிப்பதற்கு நாம் உளவியல் ரீதியான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி ஆரம்பிப்பதை விட அதனை நீண்ட நாள் கடைப்பிடிப்பதில் தான் சூட்சமம் இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு பயிற்சியை ஆரம்பிப்பது எளிதான ஒன்றாம். ஆனால் அதனை நீண்ட நாள் கடைப்பிடிப்பதற்கு நாம் உளவியல் ரீதியான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமாம்.
எந்த ஒரு பயிற்சியை தொடர்ந்து செய்ய நமக்கு தொடர்ச்சியான ஒரு தூண்டுதல் நிச்சயம் தேவைப்படும். அந்தத் தூண்டுதல்தான் நமக்கு அதன் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்து அதனை தொடர்ந்து செய்ய வைக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் யோகாப் பயிற்சியை தொடர்ந்து செய்ய விரும்பினால் அதற்கான தூண்டுதல்களை முதலில் கண்டறிய வேண்டும். அவை யோகா பயன்கள் குறித்த போஸ்டர்களை வீட்டின் சுவரில் ஒட்டி வைப்பது, பயிற்சி செய்யும் போது ஏதேனும் நல்ல இசையைக் கேட்டு செய்வது போன்றவையாக இருக்கலாம்.
உங்களுக்கு என்ன பலன் வேண்டும் என்பதை முன்பே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த பலனுக்கான பயிற்சியை தெளிவாக கண்டறிவது மட்டுமல்லாமல், அது குறித்த முழுமையான அறிவையும் வளர்த்தெடுக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். அந்தப் பலன் உங்களுக்கு பயிற்சியை தொடர்ந்து செய்வதற்கான உந்துதலைத் தரும்.
உங்களுக்கு பல பயிற்சிகளை ஒரே நாளில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால் அவை நீங்கள் எதிர்பார்க்கும் விளைவிற்கு தடங்கலாக அமைய வாய்ப்பிருக்கிறது. ஆதலால் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுங்கள். உங்களது முழு கவனத்தையும் அதன் பக்கம் திருப்புங்கள். அதை அடையுங்கள். பின்னர் பிற பயிற்சிகளின் மீது கவனம் செலுத்துங்கள்.
ஏதாவது ஒரு பயிற்சியை செய்யப் போகீறீர்கள் என்றால், அது குறித்தான முடிவை அதை செய்ய போகும் நாளிலிருந்து 30 நாட்களுக்கு முன்னர் எடுத்து விடுங்கள். இந்த முடிவு ஒரு வித தூண்டுதலை உங்கள் மூளையில் ஏற்படுத்தி உங்களை தயார் செய்யும்.
உங்களைப் போன்றே பயிற்சி செய்பவர்களுடன் இணைந்து கொள்ளுங்கள். ஆன்லைனில் அதற்கான குரூப்கள் இருந்தால் அதில் இணைந்து கொள்ளுங்கள். அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள் உங்களை பயிற்சி செய்யத்தூண்டும். நீங்கல் செய்து முடித்த பயிற்சி குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் அதை பற்றிய அறியாத மனிதர்களிடம் பேசுங்கள்.
Comments
Post a Comment