இந்தியாவில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைவதால், இந்தியாவில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் அரசின் விதிகளை ஏற்க தயார் என ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சமூக வலைதளங்கள், ஓடிடி ஆகிய டிஜிட்டல் தளங்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. அதன்படி சர்ச்சைக்குரிய பதிவுகளை 36 மணி நேரங்களுக்குள் நீக்கிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அவதூறு செய்தியை முதலில் பரப்பும் நபரை கண்டறிந்து, அவரை பற்றிய தகவல்களை நீதிமன்றங்கள் மற்றும் அரசுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இவ்விதிகளை பின்பற்ற மூன்று மாத அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதிய கட்டுப்பாட்டு விதிகளை ஏற்றுக் கொள்வதற்கான கடைசி நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். எனினும், புதிய விதிகளை சமூக வலைதள நிறுவனங்கள், இன்னும் ஏற்றதாக தெரியவில்லை.
இதனால் இந்தியாவில் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஃபேஸ்புக் இந்தியா நிறுவனம், மத்திய அரசின் விதிகளுக்கு இணங்குவதை தாங்கள் நோக்கமாக கொண்டுள்ளதாகவும், ஆனால் அரசுடன் கூடுதலாக ஆலோசிக்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி குறித்து, காங்கிரஸ் டூல் கிட் ஒன்றை உருவாக்கி இருப்பதாக பாஜக தலைவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட, காங்கிரஸ் இக்குற்றச்சாட்டை மறுத்தது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில், டெல்லி மற்றும் குர்கானில் டுவிட்டர் இந்தியா நிறுவனத்தில் போலீசார் திங்களன்று விசாரணை மேற்கொண்டனர். இவ்விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, காங்கிரஸ் சமூக வலைதள பிரிவின் தலைவர் ரோகன் குப்தா, செய்தி தொடர்பாளர் ராஜீவ் ஆகியோருக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கிடையே, திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கைகளால் பயனர்களின் தனிநபர் தகவல்களின் ரகசியம் பறிபோகாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தனியுரிமைக் கொள்கையை ஏற்காதவர்களின் கணக்குகள் முடக்கப்படாது என்றும், அதுபற்றி பயனர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படும் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment