நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கண்ணாடி உருவானது எப்படி?

மனிதன் முதன்முதலாக கண்ணாடியைக் கண்டுபிடித்தது ஒரு சுவாரசியமான தற்செயல் நிகழ்வுதான். இந்த சம்பவம்தான் கண்டுபிடிப்புக்கு ஆதாரமாக இருந்ததாக பண்டைய ரோமானிய வரலாற்று ஆசிரியர் பாலினி சொல்கிறார்.
கடற்கரை ஓரத்தில் கட்டிட கட்டுமானத்திற்கான கற்களை விற்கும் வியாபாரிகள் சிலர் ஓய்வெடுப்பதற்காக கூடாரம் அமைத்துத் தங்கினர். பசியாறுவதற்காக சில கற்களைக் கொண்டு அடுப்பு மூட்டியிருக்கிறார்கள். அந்தக் கற்கள் சூடாகி உருகி திரவமாக ஓடி பளபளப்பாக நிலத்தில் உறைந்துவிட்டது! மிக வினோதமான அந்தப் பொருளை அவர்கள் விலகி நின்று ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அந்தச் சம்பவம்தான் கண்ணாடி உருவாகக் காரணமாக அமைந்தது என சொல்லப்படுகிறது.

செயற்கையான கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டது எப்போது என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. கி.மு.1500-ம் ஆண்டு கால கட்டத்தில் மெசபடோமியா மற்றும் எகிப்தில் கண்ணாடி பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். சிலிக்கா மணலில் செய்த பாத்திர அச்சுகளை உருகிய கண்ணாடி திரவத்திற்குள் தோய்த்து கண்ணாடிப் பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இம்முறை 500 வருடங்களில் மத்திய தரைக்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளில் பரவி கண்ணாடி தயாரிப்புத் தொழில் வெற்றிகரமாக இருந்துள்ளது. கண்ணாடி தயாரிப்புக்குக் கடும் உழைப்பும், அதிக பணமும் தேவைப்பட்டன. அதனால் கண்ணாடி விலை அதிகமாக இருந்தது! அக்காலகட்டத்தில் கண்ணாடிப் பொருட்களை மன்னர்களும், பெரும் செல்வந்தர்களுமே பயன்படுத்தி வந்தனர். அறிவியல் வளர்ச்சிதான் இந்தப் பாகுபாடுகளைக் களைந்தது எனலாம்.

கண்ணாடி குறித்த மேலும் ஒரு வரலாற்றுத் தகவலும் உண்டு. கி.மு. 27-ம் ஆண்டு காலகட்டத்தில் ஊதுகுழல் கருவி சிரியன் பொறியாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு நீண்ட இரும்புக் குழலின் நுனியைக் கண்ணாடித் திரவத்தின் மேல் வைத்து அதன் மறுமுனையில் இருந்து காற்றை ஊதி திரவத்தை அச்சுக்குள் படிய வைப்பதுதான் இம்முறை. இந்த யுக்தி கண்ணாடி தயாரிப்பை மிகவும் எளிமையாக்கியது. அதனால் கண்ணாடி விலையும் குறைந்தது. சாதாரண மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தியாவில் கி.பி. 4-ம் நூற்றாண்டில் இருந்தே கண்ணாடிகள் சில ஆபரணங்களாக புழக்கத்தில் இருந்திருக்கிறது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்