சிறுவன் லாண்டன் மெல்வின் ப்ளோர் மேட்டை எடுத்து சுத்தம் செய்ய முயன்ற போது பை ஒன்று அவன் கண்ணில் பட்டது.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் 9 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பம் பயன்படுத்தும் SUV. காரின் ப்ளோர் போர்டின் (floorboard) கீழ் ஆயிரக்கணக்கான டாலர்களைக் கண்டுபிடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
தனது தந்தையின் செவ்ரொலெட் சபர்பன் (chevy suburban) காரை சுத்தம் செய்து கொண்டிருந்த 9 வயது சிறுவனான லாண்டன் மெல்வின் (Landon Melvin), காரின் ப்ளோர் மேட்டை எடுத்து க்ளீன் செய்து கொண்டிருந்தார்.
இந்த காரை சிறுவனின் தந்தை கடந்த செப்டம்பர் மாதம் செகண்ட் ஹேண்டில் எடுத்துள்ளார். சிறுவன் லாண்டன் மெல்வின் ப்ளோர் மேட்டை எடுத்து சுத்தம் செய்ய முயன்ற போது கவர் ஒன்று அவன் கண்ணில் பட்டது. அப்போது அதை குனிந்து எடுத்த சிறுவன் லாண்டன் மெல்வின் இது ஏதாவது முக்கிய பொருளாக இருக்க போகிறது என்று நினைத்து தனது தந்தையை கார் நிற்கும் இடத்திற்கு அழைத்து காட்டி உள்ளான். ஆனால் துவக்கத்தில் அவனது தந்தையோ செகண்ட் ஹேண்டாக வாங்கிய காரில் ஏதாவது பழைய பொருள் அல்லது தேவையில்லாத பேப்பர் அல்லது டாக்குமென்ட்டுகள் தான் கிடக்கும் என்று சிறுவனிடம் பதில் கூறி உள்ளார்.
மேலும் மகன் லாண்டன் மெல்வின் காட்டிய கவரை பிரித்து பார்க்க ஆர்வம் காட்டவில்லை அவனது தந்தையான மைக்கேல் மெல்வின் (Michael Melvin). ஆனாலும் விடாத சிறுவன் லாண்டன் மெல்வின் அந்த கவரை பிரித்து என்ன இருக்கிறது என்று பார்க்கும்படி தெடர்ந்து வற்புறுத்தி உள்ளான். சரி மகன் இவ்வளவு தூரம் கேட்கிறானே என்பதற்காக அவன் காரிலிருந்து கண்டெடுத்த காகித உறையை பிரித்து பார்த்தார் மைக்கேல். ஆனால் அதனுள் இருந்த பொருட்களை 5 குழந்தைகளின் தந்தையான மைக்கேல் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஏனென்றால் அந்த காகித உறைக்குள் ஆயிரக்கணக்கான டாலர் நோட்டுகள் மற்றும் சில காசோலைகள் இருந்தன. வெறும் பேப்பர் டாக்குமென்ட்டாக இருக்கும் என்று கவரை பிரித்த மைக்கேல் இதை பார்த்து அதிர்ச்சியில் வாயடைத்து நின்றார். பின் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து திரும்பி வீட்டிற்குள் ஓடிய மைக்கேல், மகன் லாண்டன் கண்டுபிடித்ததைக் காண வருமாறு தன் மனைவியை கூப்பிட்டார். அவரும் ரொக்கத்தை கண்டு அதிர்ச்சியடைந்தர்.
அதன் பிறகு படுக்கை அறைக்கு சென்று இருந்த ரொக்கத்தை மெத்தை மீது கொட்டி எண்ணி பார்த்த போது அதில் சுமார் 5,000 டாலர் ரொக்கம் தேறியது அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,63,583. தென் கரோலினாவில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களின் பணம் இது என்பதை கண்டறிந்த மைக்கேல், பணத்தை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க முடிவெடுத்தார். இதனை அடுத்து அந்த குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தான் வாங்கிய செகண்ட் ஹேண்ட் காரிலிருந்து பணம் கண்டெடுக்கப்பட்ட விஷயத்தை சொல்லியுள்ளார். இதனை அடுத்து பணத்தை பெற ஒப்பு கொண்ட அந்த குடும்பத்தினர் ஒரு சிறிய நிபந்தை விதித்தனர்.
பணத்தை கண்டெடுத்த சிறுவன் லாண்டன் தனது நல்ல செயலுக்காக 1,000 டாலர் தங்களிடமிருந்து வாங்கி கொண்டால் மட்டுமே முழு பணத்தையும் தாங்கள் வாங்கி கொள்வோம் என்று பணத்தின் உரிமையாளர்கள் கூறினர். இதற்கு சிறுவனின் தந்தை சம்மதம் தெரிவித்ததை அடுத்து, லாண்டன் மெல்வினிடம் 1000 டாலர் ரொக்கத்தை அளித்த பிறகு கண்டெடுக்கப்பட்ட பணத்தை அதன் உரிமையாளர்கள் வாங்கி கொண்டுள்ளனர்.
இதனால் உற்சாகமடைந்துள்ள சிறுவன் லாண்டன் மெல்வின், தனக்கு கிடைத்த இந்த 1,000 டாலர் வெகுமதி பணத்தை கொண்டு தான் வாங்க நினைத்துள்ள எல்லா பொருட்களையும் வாங்க போவதாக கூறி உள்ளான். சிறுவன் மற்றும் அவனது தந்தையின் நேர்மை மற்றும் அந்த நேர்மையை தவறாமல் பாராட்டி பரிசளித்த பணத்திற்குரியவர்கள் என அனைவரின் செயலையும் இந்த சம்பவத்தை கேள்விப்படும் மக்களை பாராட்டி வருகின்றனர்.
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
Comments
Post a Comment