தினசரி சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாலே போதும் இதயத்திற்கான இரத்த ஓட்டம் சீராக பாய்ந்து இதய நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் காலையில் எழுந்ததும் நடைபயிற்சி என்று வெளியில் சென்று சுத்தமான காற்றை சுவாசிப்பார்கள். இதனால் உடல் பாகங்களுக்கும் ஒழுங்கான ஆக்ஸிஜன் கிடைத்து உடல் ஆரோக்கியமாக இயங்கி வந்தது. இப்போது அவையெல்லாம் வெகுவாக குறைந்து வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்யக் கூட இயலாமல் சோம்பேறியாகி இருக்கிறோம்.
இதன் விளைவாகத்தான் இதய நோய்களும் அதிகரித்துவருகிறது. குறைந்தது நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உடற்பயிற்சியாவது நாம் செய்ய முற்பட வேண்டும். அதிலும் ஏரோபிக் உடற்பயிற்சி இதய சீரமைப்பிற்கு சிறந்ததாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இதை தினசரி சில நிமிடங்கள் செய்தாலே போதும் இதயத்திற்கான இரத்த ஓட்டம் சீராக பாய்ந்து இதய நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இதன் எண்ணற்ற நன்மைகளைப் பற்றி கீழே காணலாம்.
ஏரோபிக் உடற்பயிற்சி அல்லது ஆக்ஸிஜன் ஏற்ற உடற்பயிற்சி உங்கள் இதய செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூற்றுப்படி வாரத்திற்கு 5 முதல் 7 நாட்கள் குறைந்தது 30 நிமிடங்களாவது இதயத்திற்கான உடற்பயிற்சியை மேற்கொள்ள பரிந்துரைக்கின்றனர்.
அதே நேரத்தில் இந்த ஏரோ பிக் உடற்பயிற்சி செய்வதற்கு முன் வார்ம் அப் போன்ற தசைகளை நீட்டிக்கும் உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும் என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள்.
இது ஒரு இதய சீரமைப்பு உடற்பயிற்சி ஆகும்.' ஏரோபிக்' என்ற வார்த்தைக்கு ஆக்ஸிஜன் என்று பொருள். அதாவது காற்றில் உள்ள சுவாசிக்கும் ஆக்ஸிஜனை எடுத்து அதைத் தசைகளுக்கு செலுத்தி தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க எரிபொருளாக செயல்படுகிறது.
இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கிறது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது, கெட்ட கொழுப்புகளை நீக்கி நல்ல எச். டி. எல் கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்கிறது. நீரிழிவின் அளவை கட்டுப்படுத்துகிறது.
இதைத் தொடர்ந்து உரிய முறையில் செய்வதன் மூலம் உங்கள் உடல் எடையையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். அதிகப்படியான உடல் எடையைக் குறைக்கலாம். உடல் உறுப்புகளின் செயல்பாட்டைச் சீராக்குவதிலும் இந்த பயிற்சி முக்கியத்துவமாகிறது.
Comments
Post a Comment