நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா இருக்கா- இல்லையா ஒரு நிமிடத்தில் முடிவு இந்தியப் பேராசிரியர் குழு கண்டறிந்த புதிய கருவி

சிங்கப்பூருக்குள் நுழையும் பிற நாட்டவருக்குக் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு சேர்த்து இந்த பிரிபென்ஸ் கோ பரிசோதனையும் நடத்தப்படும்.
சிங்கப்பூர்

மூச்சுக் காற்று மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறியும் கருவிக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தக் கருவிக்கு ‘பிரிபென்ஸ் கோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள், இந்தியப் பேராசிரியர் அடங்கிய குழு 
மூச்சுக் காற்று மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை கண்டறியும் புதிய கருவியை கண்டறிந்து உள்ளது.
இந்த கருவிக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தக் கருவிக்கு ‘பிரிபென்ஸ் கோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கருவி மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை ஒரு நிமிடத்துக்குள் கண்டுபிடிக்த்து விட முடியும். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பிப்ரீத்தா நிக்ஸ் நிறுவனம் சார்பில் இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டது

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக்தைச் சேர்ந்த இந்தியப் பேராசிரியர் டி வெங்கி வெங்கடேசன், அவரின் மாணவர்கள் டாக்டர் ஜியா ஹூனன், டு ஃபாங், வேனே வீ ஆகியோர் இந்த பிரீத்தா நிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிறுவனத்துக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆதரவு அளிக்கிறது. புதிய கண்டுபிடிப்புகள், ஸ்டார்ட் அப்களுக்குத் தேவையான ஊக்கத்தையும் நிதியுதவியையும் வழங்குகிறது.

சிங்கப்பூருக்குள் நுழையும் பிற நாட்டவருக்குக் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு சேர்த்து இந்த பிரிபென்ஸ் கோ பரிசோதனையும் நடத்தப்படும்.

தற்போது நடைமுறையில் இருக்கும் ஆன்டி ரேபிட் டெஸ்ட் கருவியில் கொரோனா பரிசோதனை செய்தால் 30 நிமிடங்களுக்குள் முடிவு கிடைக்கும். ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் சில மணி நேரங்களில் முடிவு கிடைக்கும்.

ஆனால், ப்ரீபென்ஸ் கோ கோவிட் பரிசோதனைக் கருவி மூலம் ஒருவரின் மூச்சுக் காற்றைச் செலுத்தி பரிசோதனை செய்தால், ஒரு நிமிடத்துக்குள் முடிவு கிடைத்துவிடும். 

இந்தக் கருவியில் இருக்கும் சிறிய குழாயைப் பரிசோதனைக்கு உட்படுபவர் வாயில் வைத்து மூச்சுக் காற்றை அழுத்தமாக ஊதவேண்டும். அவரின் மூச்சுக் காற்று இந்தக் கருவியில் சேமிக்கப்பட்டு, ஸ்பெக்டோமீட்டர் அடுத்த சில வினாடிகளில் மூச்சுக் காற்றில் கொரோனா வைரஸ் கிருமி இருக்கிறதா இல்லையா என்பதைக் கூறிவிடும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!