நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் லேகியத்துக்கு ஆந்திர அரசு அனுமதி

கொரோனாவை குண்ப்படுத்தும் கத்தரிக்காய் லேகியத்துக்கு அனுமதி அளித்துள்ளது ஆனால் கத்தரிக்காய் கண் சொட்டு மருந்துக்கு தடைவிதித்து உள்ளது.
நெல்லூர், 

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணப்பட்டிணம் முத்துக்கூறு கிராமத்தை சேர்ந்தவர் போனஜி ஆனந்தய்யா என்பவர் பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்கி, வைத்தியம் பார்த்து வருகிறார். சமீபத்தில் இவர் கொரோனா நோயாளிகளுக்காக மருந்து தயாரித்தார். இது நல்ல பலன் தந்ததால் அவரிடம் மருந்து வாங்க பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கிருஷ்ணப்பட்டிணத்தில் குவிய தொடங்கினர்.

இது கண்ணில் போடக்கூடிய சொட்டு மருந்தாகும். இந்த சொட்டு மருந்து தேன், வால் மிளகுடன், ஒரு குறிப்பிட்ட வகையான கத்தரிக்காயின் கூழ் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு உள்ளது. நெல்லூரில் தற்போது ஆனந்தய்யா தயாரித்த மருந்துகள் பாக்கெட் ஒன்றுக்கு ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்து உண்மையில் கொரோனா தொற்றை குணப்படுத்துகிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) குழுவை கேட்டுக்கொண்டார். ஆய்வு முடிவு வரும் வரை ஆனந்தய்யாவின் மருந்து விற்பனையை நிறுத்துமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், ஆந்திர அரசு நியமனம் செய்த மருத்துவ குழு ஆயுர்வேத மருந்தை ஆய்வு செய்தது. இந்த மருந்தால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை என்றும், இவை முற்றிலும் முறையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுவதாகவும் அந்த குழு அறிவித்தது.

எனினும் உரிய பரிசோதனைக்கு பிறகு மக்களுக்கு விநியோகிக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்தது. இதன்பேரில் திருப்பதி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் அந்த மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

 ஆயுஷ் அமைச்சகம், ஐசிஎம்ஆர் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் நடத்திய ஆய்வில் ஆனந்தய்யா என்பவர் தயாரித்து வழங்கும் மருந்தில் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லையென்று நிரூபணமாகி இருப்பதால் அந்த மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் லேகியத்துக்கு மட்டுமே அனுமதி என்றும், கண்ணில் விடப்படும் சொட்டுமருந்துக்கு அனுமதி இல்லையென்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!