நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை; ₹190 கோடி லாட்டரி பரிசு டிக்கெட் தொலைந்த சோகம்

கலிபோர்னியாவில் லாட்டரியில் பெண் சுமார் 190 கோடி ரூபாய் வென்றார்; ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாகி விட்டதால், அந்த பெண் அதிர்ச்சியில் உள்ளார் .
லாஸ் ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியாவில் (Caloifornia) லாட்டரியில் பெண் சுமார் 190 கோடி ரூபாய் வென்றார்; ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாகி விட்டதால், அந்த பெண் அதிர்ச்சியில் உள்ளார்

சுமார் 6 மாதங்களுக்கு முன்பு, கலிபோர்னியாவில் 26 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 190 கோடி) லாட்டரி சீட்டு விற்கப்பட்டது. இந்த டிக்கெட்டைப் பெற்ற பெண்ணால் பரிசை வென்ற போதும், ஒரு பைசா கூட பெற முடியவில்லை. அதனால், அந்த பெண், செய்வதறியாமல் திகைத்து போயுள்ளார்.

நடந்தது என்னவென்றால், அந்தப் பெண் டிக்கெட் இல்லாமல் லாட்டரி கடைக்கு சென்று வென்ற லாட்டரி பணம் கேட்டார். அந்தப் பெண் டிக்கெட் எண்ணைக் குறித்து வைத்திருந்ததால், அதை வைத்து பணம் கொடுக்குமாறு கேட்டார்,. அவர், டிக்கெட்டை தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த நிலையில், ஞாபகம் இல்லாமல் கவனக் குறைவாக அதை சலவைக்கு போட்டு விட்டார். சலவை கடையில் பதிவான வீடியோ காட்சிகளை, கலிபோர்னியா லாட்டரி அதிகாரிகளுக்கு அனுப்பியதாகவும் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அந்த டிட்கெட் அந்த பெண்ணின் டிக்கெட் தான் என்பதை உறுதிப்படுத்த இந்த காட்சிகள் போதுமானதாக இல்லை.

லாட்டரி அதிகாரிகளிடம் இருந்து லாட்டரி பரிசு பணத்தைப் பெறுவதற்கு, அந்தப் பெண் டிக்கெட்டைக் காட்ட வேண்டும் அல்லது பின்புறத்தின் புகைப்படத்தை வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இருப்பினும், இந்த வழக்கில் பெண் மேல் விசாரணைக்கு செல்லலாம் என கூறப்படுகிறது.

டிக்கெட்டுகளை விற்கும் இந்த கடைக்கு 130,000 டாலர் போனஸ் கிடைத்துள்ளது. பரிசுத் தொகைக்கு உரிமை கோருபவர் யாரும் இல்லை என்றால், கலிபோர்னியா பள்ளிகளுக்கு $ 19.7 மில்லியன் டாலர் உதவித்தொகையாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்