நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

1980களில் எப்படி இமெயில் அனுப்பியிருப்பாங்க தெரியுமா? - வீடியோ இதோ!

 1980களில் இமெயில் அனுப்ப எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று யோசித்து பார்த்திருக்கிறீர்களா?, கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா?. ஆனால் ஒருவர் அதனை வீடியோவாகவே வெளியிட்டுள்ளார்.


உலக அளவில் தொழில்நுட்பங்கள் அபரிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. நொடிப்பொழுதில் இங்கிருந்த படியே வெளியூரில், வெளிநாடுகளில் உள்ளவர்களை தொடர்புகொள்ள முடியும். அவர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும். மருத்துவ ரீதியான பிரச்சனைகளுக்கும் தொழில் நுட்பங்கள் பெரிதும் கைகொடுத்துவருகின்றன. தொழில் நுட்பங்களின் உதவியுடன் தான் கொரோனா எனும் பெருந்தொற்று காலங்களை எளிதாக கடந்து கொண்டிருக்கிறோம்.


பெரும்பாலானோரக்கு வீட்டிலேயே இருந்து பணி செய்ய முடிகிறது. பண வரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலம் செய்துகொள்ளலாம். ஆன்லைன் மூலமே பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் ஒரு 20 வருடங்களுக்கு முன்பு மேற்குரிய அனைத்தும் பெரும் சவாலானதாக இருந்தது என்பதை நம் பெற்றோர்களை கேட்டாலே தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் கடந்த 1980களில் இமெயில் அனுப்ப எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று யோசித்து பார்த்திருக்கிறீர்களா?, கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா?. ஆனால் ஒருவர் அதனை வீடியோவாகவே வெளியிட்டுள்ளார்.


பத்திரிக்கையாளர் ஜோன் எர்லிச்மேன் (Jon Erlichman) தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 1984ல் இமெயில் அனுப்புவது எவ்வளவு கஷ்டமான செயலாக இருந்தது என்பதை புரிந்துகொள்ள முடியும்.


அந்த வீடியோவில் பிரிட்டிஷ் டிவி தொகுப்பாளர் ஒருவர் இமெயில் அனுப்பவது குறித்து முழுவிவரங்களையும் கூறுகிறார். அந்த தொகுப்பாளர் கையில் கம்யூட்டர் ஒன்றை கையில் வைத்து தனது மெசேஜ்களை பார்வையிடுகிறார். அப்போது இணையதளம் பொதுப்பயன்பாட்டுக்கு வரவில்லை. மோடம் ஒன்றை டெலிபோன் ரிசீவர் மற்றும் கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்திருக்கிறார். அந்த ரயில் டெலிபோன் ஒவ்வொரு முறையும் காயின் போட்டால் தான் வேலை செய்யும். அவரிடம் போதுமான காயின்கள் இல்லாத காரணத்தால் அடிக்கடி கணெக்சன் கட்டாகிவிடும்.

பின்னர் அவர் ஒரு ஹோட்டல் ஒன்றின் அறையில் இருந்து மீண்டும் தன் முயற்சியை தொடர்கிறார். அவர் டெலிபோனில் லண்டன் நம்பர் டயல் செய்கிறார். தொடர்ந்து கம்ப்யூட்டர் நம்பரை இடுகிறார். பீப் சத்தம் கேட்டதும் மோடமை செல்போன் ரிசீவரில் இணைக்கிறார். அந்த மோடம் ஏற்கனவே கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

watch video

இருப்பினும் அவரால் இமெயில் செய்திகளை இன்னும் அணுக முடியவில்லை,ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்படைந்துவிடுகிறார். ஒரு வழியாக லண்டனில் உள்ள மெயில் பாக்ஸ் ஒன்றுடன் இணைப்பு நிறுவப்பட்ட பிறகு, அவர் தனது அக்கவுண்ட் எண் மற்றும் பெர்சனல் ஐடியை கம்ப்யூட்டரில் உள்ளிட வேண்டும். சில நொடிகளைத் தொடர்ந்து, டிவி தொகுப்பாளர் தனது மெயில்களை அவரால் பார்க்க முடிகிறது.


இந்த வீடியோ நமக்கு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் எவ்வளவு இலகுவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை காட்டுகிறது. இதனையடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலருக்கும் இந்த வீடியோ பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது, அந்த வீடியோவிற்கு கீழ் அவர்களின் கமெண்ட்டுகளை பார்த்தால் உணர முடிகிறது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்