நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தீப்பற்றி எரியும் வீடு முன் நின்று சிரிக்கும் பெண் குழந்தையின் பிரபல புகைப்படம் ரூ. 3.5 கோடிக்கு ஏலம்

தீப்பற்றி எரியும் வீடு முன் நின்று சிரிக்கும் பெண் குழந்தையின் புகைப்படம் சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் வடக்கு கலிபோனியா மாகாணத்தில் வசித்து வந்தவர் டேவ். இவரின் மகள் பெயர் ஜூ ரோத். 2005 ஆம் ஆண்டு ஜூ ரோத்திற்கு 10 வயது நிரம்பி இருந்தது. அந்த ஆண்டு ஜூ ரோத் வசித்துவந்த வீட்டின் அருகே இருந்த மற்றொரு வீடு மீது எதிர்பாராத விதிமாக தீப்பற்றியது. இதனால், டேவ் தனது மகள் ஜூ ரோத்தை தனது வீட்டில் இருந்து வெளியே அழைத்து சென்று பக்கத்து வீட்டில் பற்றி எரியும் தீயை மீட்புக்குழுவினர் அணைக்கும் நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

அப்போது, அந்த வீடு தீப்பற்றி எரியும் போது 10 வயது சிறுமியான ஜூ ரோத் அந்த வீட்டின் அருகில் முகத்தில் புன்னகையில் நின்றுகொண்டிருந்தார். தனது மகள் ஜூ ரோத் பற்றி எரியும் வீடு முன் சிரித்துக்கொண்டு நிற்பதை டேவ் புகைப்படமாக எடுத்தார். 

அந்த புகைப்படம் ‘டிசாஸ்டர் கெல்’ என்ற பெயரில் சமூக வலைதளங்கள் தற்போது மிகவும் வைரலாக வருகிறது. இந்த புகைப்படத்தை மையமாக வைத்து பல்வேறு மீம்கள் வெளியாகி வருகின்றன. 

பக்கத்து வீட்டுக்காரரின் வீடு பற்றி எரியும் போது அந்த சிறுமி சிரிக்கும்புகைப்படம் மிகவும் பிரபலமானது. அந்த புகைப்படத்தின் உண்மையான பிரதி டேவின் மகள் ஜூ ரோத்தின் கைவசம் இருந்து வந்தது. 

இந்நிலையில், ஜூ ரோத் தற்போது 21 வயதை எட்டியுள்ளார். அவர் தனது பிரபல புகைப்படமான வீடு பற்றி எரியும் போது அதை பார்த்து சிரிக்கும் வகையிலான அந்த புகைப்படத்தின் உண்மையான புகைப்படத்தை ஏலத்தில் விற்பனை செய்ய திட்டமிட்டார். அதற்காக, ஏலம் விடப்பட்டது.

அந்த ஏலத்தில் ’டிசாஸ்டர் கெல்’ ஜூ ரோத் பக்கத்து வீட்டுக்காரரின் வீடு எரியும் போது சிரிக்கும் உண்மையான புகைப்படம் 4 லட்சத்து 73 ஆயிரம் டாலருக்கு ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தின் இந்திய மதிப்பு 3 கோடியே 50 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த பணத்தை தனது படிப்பு செலவுக்கும், நற்பணிகளுக்கும் பயண்படுத்த உள்ளதாக தற்போது 21 வயது நிரம்பிய ஜூ ரோத் என தெரிவித்தார். 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்