நாட்டின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஃபேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும் கோடிக்கணக்கானோர் தினசரி ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். கோவிட்-19 இரண்டாம் அலை நாட்டை புரட்டி எடுத்து வரும் நிலையில், ஆபத்தான COVID-19 அலைகளுடன் இந்தியா தொடர்ந்து போராடி வருவகிறது. நாட்டின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் எமெர்ஜென்சி பதில் (emergency response) மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு தாங்கள் எவ்வாறு உதவ போகிறோம் என்ற விவரங்களை ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ஃபேஸ்புக், விரைவில் தனது மொபைல் App-ல் வாக்சின் ஃபைன்டர் டூல் (vaccine finder tool) எனப்படும் அம்சத்தை சேர்க்க இந்திய அரசுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக கூறி உள்ளது. இந்த வாக்சின் ஃபைன்டர் டூலானது இந்தியாவில் உள்ள ஃபேஸ்புக் யூசர்கள் தாங்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகிலுள்ள கொரோனா தடுப்பூசி மையங்களை அடையாளம் காண உதவும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்காக ஃபேஸ்புக் இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கூட்டாளராக இருக்கும், மேலும் App-ற்கான vaccine finder tool அப்டேட்டை இன்னும் சில தினங்களில் இந்திய யூசர்களுக்கு வழங்க உள்ளது. கொரோனா இரண்டாம் அலையில் தினசரி நோய் தொற்று பாதிப்புகள் மற்றும் இறப்புகள் அதிகரிப்பதற்கும் மருத்துவ பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜனின் பற்றாக்குறை ஏற்பட்டு சுகாதாரத்துறை ஸ்தம்பித்துள்ள இந்த நேரத்தில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவுக்கு உதவி வருகின்றன.
இந்த நிலையில் ஃபேஸ்புக்கின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. முன்னதாக இந்த வார தொடக்கத்தில் ஃபேஸ்புக் இந்தியாவில் கோவிட்-19 நிலைமைக்கான அவசரகால பதில் முயற்சிகளுக்கு 10 மில்லியன் டாலர் ஒதுக்குவதாக அறிவித்தது. தவிர மருத்துவ பொருட்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுக்கு உதவ இந்தியாவில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் கூட்டு சேர்ந்துள்ளது.
இதனிடையே vaccine finder tool அம்சம் குறித்து மேலும் தகவல் தெரிவித்துள்ள ஃபேஸ்புக், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட் ஃபோன்களில் இந்த அம்சம் 17 இந்திய மொழிகளில் வெகு விரைவில் கிடைக்கும் என்றும் கூறி உள்ளது. மேலும் இந்த டூல் மூலம் யூசர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள தடுப்பூசி மையங்களை அடையாளம் காண முடியும். தவிர தடுப்பூசி மையங்கள் செயல்படும் நேரம் போன்ற கூடுதல் தகவல்களுடன் இந்த டூல் யூசர்களுக்கு உதவும். இதற்கான தரவுகளை இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்க உள்ளது.
மேலும் இந்த அம்சம் வாக்-இன் விருப்பங்களையும் (குறிப்பாக 46 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு) காண்பிக்கும். இது கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்வதற்கான லிங்க் மற்றும் உங்கள் தடுப்பூசி அப்பாயின்மெண்ட்டை திட்டமிடலாம். கோவிட்-19 தகவல் மையம் மற்றும் அவசரகால சிகிச்சையை எவ்வாறு பெறுவது மற்றும் வீட்டில் லேசான கோவிட் அறிகுறிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றிய தகவல்களும் இருக்கும் என்றும் இதை யுனிசெப் இந்தியா வழங்கும் என்றும் ஃபேஸ்புக் கூறுகிறது.
Comments
Post a Comment