'ரஷ்யாவுக்கே சென்று ஸ்புட்னிக்-வி செலுத்திக்கலாம்!' - சூடுபிடிக்கும் மருத்துவ சுற்றுலா
- Get link
- X
- Other Apps
இதயம், மூளை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறுவை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மருத்துவச் சுற்றுலா தற்போது தடுப்பூசி செலுத்துவதற்கான புதிய பரிணாமம் எடுத்துள்ளது.
புற்றுநோய், இதய மாற்று அறுவை சிகிச்சை, மூளை சம்பந்தமான அறுவை சிகிச்சை உள்ளிட்ட மிகவும் சிக்கலான சிகிச்சைகளுக்காக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு இந்திய பிரபலங்கள் தொடங்கி பலரும் செல்வதை செய்திகளாகப் பார்க்க முடியும். அதேபோல பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்து சிகிச்சை பெறுவதும் இருந்து வருகிறது. இவற்றைப் பொதுவாக 'மருத்துவ சுற்றுலா' என அழைப்பார்கள்.
கொரோனா கிட்டதட்ட அனைத்துத் துறைகளையும் தலைகீழாக புரட்டிப்போட்டுவிட்ட நிலையில், புதுமையை புகுத்திக்கொள்ளும் துறைகள் மட்டுமே பிழைத்திருக்க முடியும் என்ற நிலைதான் இருக்கின்றது. அப்படி சுற்றுலாத் துறையும் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள மருத்துவ சுற்றுலாவை பயன்படுத்திக்கொள்ள தொடங்கியிருக்கிறது. அதுதான் தடுப்பு ஊசி செலுத்த வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்கிறோம் என்ற புதிய யோசனை.
டெல்லியிலிருந்து செயல்படக்கூடிய துபாயின் தனியார் சுற்றுலா நிறுவனம் ஒன்று, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்துள்ளது. 1.30 லட்ச ரூபாய் கொடுத்தால் போதும், ரஷ்யா அழைத்துச் சென்று இரண்டு டோஸ்கள் ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், அதுமட்டுமில்லாமல் டெல்லியிலிருந்து மாஸ்கோவிற்கு விமான கட்டணம் பிடித்தல், மூன்று நட்சத்திர ஹோட்டலில் நான்கு நாட்கள் தங்குவதற்கான கட்டணம், மாஸ்கோவில் 20 நாட்கள் தங்குவதற்கான கட்டணம், மாஸ்கோ இடையிலான ரயில் கட்டணம் மற்றும் மாஸ்கோ மற்றும் பீட்டர்ஸ்பர்க் நகரங்களில் சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல் என அனைத்தும் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் நிறுவனம் ஏற்கெனவே சில வாரங்களுக்கு முன்பாகவே ஜூலை மாதத்திலிருந்து தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான மருத்துவச் சுற்றுலா தங்கள் நாட்டில் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனங்களும் இந்தியாவிலிருந்து செயல்படக்கூடிய உள்ளூர் சுற்றுலா நிறுவனங்களும் ரஷ்யாவிற்கு மருத்துவச் சுற்றுலா அழைத்துச் செல்லும் முயற்சிகளை தொடங்கியிருக்கிறார்கள். பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இதற்கான சுற்றுலா ஏஜென்டுகள் தற்போது தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளனர்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment