நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பார்க்காமலே காதல்; இது பேஸ்புக் காதல் -திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியரின் ருசிகர வாழ்க்கை

முகநூலிலேயே பேசி ஒருவருக்கொருவர் பார்க்காமல் கூட காதல் வரலாம் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கலாம்.
காதல் எங்கே, எப்போது தோன்றும் என யாராலும் சொல்ல முடியாது. முகநூலிலேயே பேசி ஒருவருக்கொருவர் பார்க்காமல் கூட காதல் வரலாம் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கலாம். அவ்வளவு ஏன்? முகநூலில் பேசி காதலித்து திருமணம் செய்து கொள்வதை ஏற்றுக்கொள்ளாதவர்களும் உண்டு.

அவர்கள் அனைவரும் மும்பையை சேர்ந்த சினேகா சவுத்ரி மற்றும் ஹர்ஷ் மேத்தாவின் காதல் கதையை தெரிந்துக்கொள்ள வேண்டும். சினேகா சவுத்ரி எப்படி ஹர்ஷை முகநூலில் மட்டுமே பேசி காதலித்தார்? பின் எப்படி திருமணம் செய்துகொண்டனர்? என்பதை ‘ஹ்யூமன்ஸ் ஆப் பாம்பே’ என்ற முகநூல் பக்கத்தில் தன் அழகிய வார்த்தைகளிலேயே பகிர்ந்து கொண்டுள்ளார்.

திருமணம் செய்துகொள்ள வேண்டும் என சினேகா சவுத்ரி முடிவு செய்தபோது அவருக்கு வயது 28. அப்போது, தனக்கு தெரிந்த ஆண் நண்பர்களிடம் பேசி பார்த்துள்ளார். ஆனால், அவர்களிடம் காதல் உணர்வோ, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமோ ஏற்படவில்லை. “அந்த சமயத்தில் தான் என்னுடைய பேஸ்புக்கில் ஹர்ஷ் என்பவரிடம் இருந்து ‘நாம் இருவரும் ஒருவருக்கொருவர் ஏற்கனவே அறிந்திருக்கிறோமா?’ என மெசேஜ் வந்திருந்தது. அதற்கு நான் பதில் அளித்தேன். அன்றிலிருந்து நானும் ஹர்ஷூம் தொடர்ந்து பேஸ்புக்கில் உரையாடினோம்” என்கிறார் சினேகா.

அன்றிலிருந்து இருவரும் தங்களுடைய நண்பர்கள், வாழ்க்கை குறித்தெல்லாம் பேசியிருக்கின்றனர். அந்த சமயத்தில் ஹர்ஷ் ஆஸ்திரேலியாவில் வசித்துள்ளார். சினேகா மும்பையில் இருந்திருக்கிறார். “ஆனால், எங்களுக்குள் நாங்கள் இத்தனை தொலைவை உணரவே இல்லை. எங்களின் உரையாடல்கள் உயிர்ப்புடன் இருந்தது” என கூறுகிறார் சினேகா.

“நாங்கள் ஒரு மாதம் தொடர்ந்து பேசினோம். ஆனால், அது எங்களுக்கு ஒரு வருடம் போல் இருந்தது. நேரம் மெதுவாக கடந்து கொண்டிருந்தது. பேசிக்கொண்டே இருந்தோம். ஆனால், எங்களுக்கு போதவில்லை. ஒரு நாள் 18 மணிநேரம் தொடர்ந்து பேசியது கூட நினைவு இருக்கிறது. செல்போன் சார்ஜ் இல்லாவிட்டால், லேப்டாப்பில் ஸ்கைப் மூலம் பேசுவோம். நான் அடிமையாகி விட்டது போன்று உணர்ந்தேன். அவருடன் எதனையும் பகிர்ந்துகொள்ளாமல் இருந்தால் அந்த நாளே எனக்கு முழுமையடையாது” என்கிறார் சினேகா.

ஒருநாள் ஹர்ஷ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், ‘நான் காதலில் இருக்கிறேன் என நினைக்கிறேன்’ என பதிவிட்டிருக்கிறார். அதன்பிறகு சினேகாவுடன் பேசும் போதெல்லாம் ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என உரையாடலின் முடிவில் சொல்வது ஹர்ஷின் வழக்கமாகியிருக்கிறது. அதற்கெல்லாம், ‘ஓ.கே, நன்றி’ என்று மட்டுமே சினேகா சொல்லி வந்திருக்கிறார்.

“ஒருமுறை எனக்கு மூன்று கூழாங்கற்களின் படத்தை ஹர்ஷ் மெயில் அனுப்பியிருந்தார். நான் ஏற்கனவே பெங்குயின்கள் எப்படி நேர்த்தியான கூழாங்கற்களை தேர்ந்தெடுத்து, தன்னுடைய துணையின் காலுக்கடியில் வைத்து காதலை வெளிப்படுத்தும் என்பதை அவரிடம் சொல்லியிருந்தேன். அதனால் அவர் அனுப்பியிருந்த கூழாங்கற்கள் எதனைக் குறிக்கின்றன என்பது எனக்கு தெரிந்திருந்தது. அந்த கூழாங்கற்களில் ‘என்னை திருமணம் செய்துகொள்கிறாயா?’ என எழுதப்பட்டிருந்தது. நான் சிறிதும் தயக்கமின்றி சம்மதித்தேன்” என தன்னுடைய காதல் அனுபவத்தை பகிர்கிறார் சினேகா.

அதுவரை சினேகாவும் ஹர்ஷூம் ஒருமுறை கூட நேரில் பார்த்தது இல்லை. அதன்பிறகு தான் ஹர்ஷ் ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பை வந்துள்ளார். எப்போது தெரியுமா? அவர்களுடைய திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான். பெற்றோர்கள் சம்மதமின்றி சட்டப்படி பதிவு செய்து திருமணம் செய்துகொண்டனர்.

”திருமணமாகி 3 வருடங்களாகின்றன. நிறைய சாலை வழிப் பயணங்களை மேற்கொள்கிறோம். 90-களின் இசையை கேட்கிறோம். நிறைய கேள்விகளை கேட்டுக் கொள்கிறோம். அதில் ஒன்று, "பேஸ்புக்கில் யார் முதலில் நட்பு அழைப்பைக் கொடுத்தது என்பது” என மகிழ்ச்சியுடன் தன் காதல் கதையை முடிக்கிறார் சினேகா.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்