நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மெய்நிகர் மோசடியாளர்களைக் கண்டறியும் 'ஃபேக்பஸ்டர்' - பஞ்சாப் ஐஐடி கண்டுபிடிப்பு

 பஞ்சாப் மாநிலத்தின் ரோபோரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து மெய்நிகர் கருத்தரங்கங்களில் எவருக்கும் தெரியாமல் நுழையும் போலி நபர்களைக் கண்டறிவதற்காக 'ஃபேக்பஸ்டர்' என்று அழைக்கப்படும் தனித்துவம் வாய்ந்த கண்டறிவியை உருவாக்கியுள்ளனர். 


சமூக ஊடகங்களில் ஒருவரைக் களங்கப்படுத்தும் அல்லது கேலி செய்யும் வகையில் ஒருவரது முகத்திற்குப் பதிலாக வேறு ஒருவரது முகத்தை மாற்றுவது போன்ற செயல்களையும் இந்தக் கருவியால் கண்டறிய முடியும்.

தற்போதைய பெருந்தொற்று காலகட்டத்தில், பெரும்பாலான அலுவலகக் கருத்தரங்குகளும், பணிகளும் இணையதளம் வாயிலாக நடைபெற்று வரும் வேளையில், இந்தத் தீர்வின் வாயிலாக மெய்நிகர் கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ள யாரேனும் ஒருவரது காணொலி, போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியும். 

அதாவது இணையக் கருத்தரங்கம் அல்லது மெய்நிகர் வாயிலாக நடைபெறும் கூட்டங்களில், உங்களது சக பணியாளர்களின் ஒருவரது சார்பாக வேறு ஒருவர் அவரது முகத்தை மாற்றிக் கலந்து கொள்கிறாரா என்பதை இந்தத் தொழில்நுட்பம் கண்டறியும்.


இந்த 'ஃபேக்பஸ்டர்' கருவியை உருவாக்கிய நான்கு நபர் குழுவில் முக்கிய உறுப்பினரான டாக்டர் அபினவ் தால் இதுபற்றிக் கூறுகையில், "அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் வாயிலாக ஊடகங்களில் போலியான தகவல்கள் அதிகரித்துள்ளன. இது போன்ற தொழில்நுட்பங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து மிகவும் யதார்த்தமாகக் காட்சி தருகின்றன. இதனை கண்டறிவது மிகவும் சவாலாக உள்ளது" என்று தெரிவித்தார்.


ALSO READ : 12 இலக்க பெருக்கல் கணக்கிற்கு 10 நிமிடத்தில் தீர்வு ;ஆட்டிசம் பாதிப்புள்ள சிறுமி சாதனை

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!