யூடியூப் தளத்தில் 880 மில்லியனைக் கடந்த Charlie Bit My Finger வீடியோ தற்போது NFT ஏலத்தில் விடப்படுகிறது.
14 ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப் தளத்தில் Charlie Bit My Finger என்ற வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. குழந்தைகளான ஹாரியும், சார்லியும் விளையாடும் அந்த வீடியோவில், அண்ணன் ஹாரி, சார்லியின் வாயில் தன் கையை வைக்கிறார். அப்போது சார்லி நறுக்கென்று கடிக்கிறார். உடனடியாக கையை எடுத்துக்கொள்ளும் ஹாரி, மீண்டும் தன்னுடைய தம்பியின் வாயில் கையை வைக்கிறார். சுட்டிக் குழந்தையான சார்லி, தற்போது நறுக்கென்று முன்பைவிட வேகமாக கடித்து விடுகிறார்.
வலியில் இருக்கும் ஹாரி, Charlie Bit My Finger என்ற மழலை மொழியில் கூறுகிறார். பார்ப்பவர்கள் அனைவரையும் ரசிக்க வைக்கும் இந்த இரு குழந்தைகளின் வீடியோ, யூடியூப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. சுமார் 14 ஆண்டுகளில் Charlie Bit My Finger வீடியோ 880 மில்லியன் பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. மேலும் ஒரு மணி மகுடமாக இந்த வீடியோ NFT ஏலத்தில் விடப்பட உள்ளது. அதாவது உலகில் உள்ள கலைப் பொருட்களுக்கு டிஜிட்டல் வடிவில் கொடுக்கப்படும் 'Non பங்கிபிள் டோக்கன்' ஆகும்.
இந்த டோக்கன், இன்னொரு பொருள் இல்லாமல் ஒன்று மட்டுமே இருக்கக்கூடிய, முதல் பொருள் ஆனால் ஒரே பொருள் என்ற அங்கீகாரம் இருக்ககூடியவைகளுக்கு மட்டும் கிரிப்டோகரன்சி வடிவிலான valuble asset உரிமம் கொடுக்கப்படுகிறது.
ஆடியோ, வீடியோ, புகைப்படம், மீம்ஸ் என அனைத்து பிரிவுகளிலும் இந்த டோக்கன் கொடுக்கப்படுகிறது. புரியும் வகையில் கூற வேண்டும் என்றால், Charlie Bit My Finger என்பது ஒரே அசல் வீடியோ, டிவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சியின் முதல் டிவீட் ஆகிவற்றில் எந்த மாறுபாடும் இருக்க முடியாது. அத்தகைய வீடியோ, ஆடியோ, புகைப்படம் ஆகியவற்றின் உரிமையை NFT (non-fungible token) ஏலத்தின் மூலம் ஒருவர் வாங்கிக்கொள்ள முடியும்.
வாங்குபவர்களுக்கு, அந்த வீடியோ அல்லது புகைப்படம் மற்றும் GIF பயன்படுத்தப்படும் போதெல்லாம் ராயல்டி தொகை கிடைக்கும். அந்தவகையில், டிவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சியின் முதல் டிவீட் 2.9 மில்லியனுக்கு NFT மூலம் விற்பனை செய்யப்பட்டது. அண்மையில், Disadter Girl என அழைக்கப்படும் ஜோஸ் ரோத் என்ற சிறுமி தனது புகைப்படத்தை NFT ஏலம் மூலம் 3,70,52,697 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தார். கடந்த 2005 ஆம் ஆண்டில் வீடு ஒன்று எரிந்து கொண்டிருக்கும்போது, அந்த வீட்டின் முன்பு சிரித்தவாறு ஜோஸ் ரோத் இருக்கிறார். அவரது தந்தையால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், அந்தப் புகைப்படத்தை NFT மூலம் விற்பனை செய்து, அதில் கிடைத்த பணத்தை தொண்டு நிறுவனத்துக்கும், கடனை அடைப்பதற்காகவும் பயன்படுத்தினார். டிக் டாக்கும் NFT-யில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முதல் ஆஸ்கார் நாமினேஷன் லிஸ்ட் முதல் பல்வேறு விந்தையான அசல் Copy, NFT ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
என்.எப்.டி உரிமைகோரும் நடைமுறை மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து வருகிறது. கிரிப்டோகரன்சியை பயன்படுத்தி மட்டுமே இந்த ஏலத்தில் பங்குபெற முடியும் என்பதால், இந்தியாவில் இந்த முறை வருவதற்கு சாத்தியமில்லை என கூறப்படுகிறது. ஏனென்றால், கிரிப்டோகரன்சிக்கு இந்தியாவில் தடை உள்ளது.
Comments
Post a Comment