Viral Photo: NASA வெளியிட்ட ஒரியன் நெபுலா புகைப்படம் வைரலானது
- Get link
- X
- Other Apps
சூரியக் குடும்பத்திற்கு அப்பால், தூசு, ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் ஏற்றமடைந்த வாயுக்களால் ஆன திரளான முகில் என்பதே நெபுலா (Nebula) ஆகும்.
சூரியக் குடும்பத்திற்கு அப்பால், தூசு, ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் ஏற்றமடைந்த வாயுக்களால் ஆன திரளான முகில் என்பதே நெபுலா (Nebula) ஆகும். புவியியலில் முகில் என்பது பூமியின் மேற்பரப்புக்கு மேல், வளிமண்டலத்தில் மிதக்கும், சிறு நீர்த்துளிகள் அல்லது உறைந்த பளிங்குத் துகள்கள் ஒன்றாகச் சேர்ந்த ஒரு தொகுதி. நெபுலா என்ற லத்தின் சொல்லில் இருந்து பெறபப்ட்ட பெயர். இதற்கு பனிமூட்டம் அல்லது புகை என்ற அர்த்தம் உள்ளது.
பூமிக்கு மிக நெருக்கமாக உள்ள மிகப்பெரிய நட்சத்திர உருவாக்கத்தின், பகுதியாக இருக்கும் ஓரியன் நெபுலாவின் அற்புதமான புகைப்படத்தை சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த படம் மிகவும் வைரலாகியுள்ளது. M42 என்றும் அழைக்கப்படும் ஓரியன் நெபுலா 24 ஒளி ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது சூரியனை விட சுமார் 2,000 மடங்கு நிறை (Mass) கொண்டது.
ஓரியன் நெபுலாவின் புகைப்படத்தில் ஒளிரும் நட்சத்திரங்களுடன் வண்ணங்களின் சிதறல்களையும், தூசி மற்றும் வாயுவின் மென்மையான மேகங்களையும் காட்டுகிறது.
இரண்டு நாட்களில் 1.18 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்று இந்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகியுள்ளது. நாசா தனது இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டதோடு, நாசா “ஓரியன் நெபுலாவை எவ்வாறு விவரிப்பீர்கள்?" என்ற கேள்வியையும் முன் வைத்தது. இந்த கேள்விக்கு ஆயிரக்கணக்கான இன்ஸ்டாகிராம் பயனர்கள் பல்வேறு விதமாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment