நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

3 லட்சம் விளக்குகள்; பூமியை காக்க துறவிகளின் வித்தியாசமான வேண்டுகோள்

பலர் இந்த நிகழ்ச்சியை வரவேற்றாலும் இத்தனை மெழுகுவர்த்திகளை ஏற்றுவதும் சுற்றுசூழலுக்கு தீங்கு தரும் என்று கூறி விமர்சனங்களையும் பதிவு செய்தனர்.

Thai monks light 330000 candles : 

வெள்ளிக்கிழமை அன்று புவி தினத்தை முன்னிட்டு தாய்லாந்து நாட்டில் உள்ள புத்த துறவிகள் 3,30,000 மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து உலகை காக்க புதிய வேண்டுகோளை விடுத்துள்ளனர். அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கின்னஸ் உலக சாதைனையை புரிய வாட் தம்மகயா புத்த கோவிலில் உள்ள 78 ஏக்கர் பகுதியில் எரியும் மெழுகுவர்த்திகளை உலகிற்கு ஒரு நல்ல செய்தியை குறிப்பிட்டுள்ளனர். உலகத்தை பிரதிபலிக்கும் வரைபடத்தை உருவாக்கி அதில் புத்த துறவி ஒருவர் தியானம் செய்வது போன்று மெழுகுவர்த்திகளால் வடிவமைக்கப்பட்டிருந்தது.


மனதை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். உலகை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் என்ற சித்தாந்தத்தை மனதில் கொண்டு இது உருவாக்கப்பட்டது என்று கோவிலின் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு பதில் அளித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்று காரணமாக கிட்டத்தட்ட 3 லட்சம் புத்த துறவிகள் ஆன்லைன் மூலமாக இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பலர் இந்த நிகழ்ச்சியை வரவேற்றாலும் இத்தனை மெழுகுவர்த்திகளை ஏற்றுவதும் சுற்றுசூழலுக்கு தீங்கு தரும் என்று கூறி விமர்சனங்களையும் பதிவு செய்தனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!