நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆப்பிரிக்க காடு; எதிர் நோக்கி வரும் ஒட்டகச் சிவிங்கி! சாமர்த்தியமாய் தப்பித்த இளைஞர்

இந்த வீடியோ குறித்தும் அந்த சுற்றுலா பயணிகள் குறித்தும உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தென்னாப்பிரிக்காவில் இருக்கும் விலங்குகளை பார்ப்பதற்காகவே அந்நாட்டிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மிகவும் அதிகம். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு சென்று சைக்கிளில் அங்கிருக்கும் இயற்கை அழகை ரசிக்க சென்ற இருவர்களுக்கு கிடைத்த வரவேற்பைப் பாருங்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு எர்த்பிக்ஸ் என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஹிட் அடித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ளனர்.

சைக்கிளில் பயணித்து வந்த சுற்றுலா பயணியை எதிர்கொண்டு வரவேற்கிறது ஒட்டகச்சிவிங்கி ஒன்று. அதனை பார்த்ததும் அங்கிருந்து ஓடவோ, அல்லது அதனை அச்சுறுத்தவோ இல்லாமல் அமைதியாக, தன்னை நெருங்கும் போதெல்லாம் தலையை கீழே தனித்து நின்று விடுகிறார். இந்த வீடியோவை பார்க்கவே ”ரொம்ப ரொம்ப க்யூட்டா இருக்கு” என்று தான் சொல்ல வேண்டும். இந்த வீடியோ குறித்தும் அந்த சுற்றுலா பயணிகள் குறித்தும உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!