நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

4 நாட்களில் 2 முறை எவரெஸ்ட்டுக்கு சென்று உலக சாதனை!

 நேபாளைச் சேர்ந்த மலையேற்றக் குழுவின் வழிகாட்டி ஒருவர் 4 நாட்களில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து உலக சாதனை படைத்துள்ளார்.


மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்டுக்கு செல்ல வேண்டும் என்பது பயணங்களில் ஆர்வம் கொண்டவர்களின் முதல் விருப்பமாக இருந்து வருகிறது. ஆபத்தும், சவால்களும் நிறைந்த இந்த பயணத்தைத் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு முறை எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுவிட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும் நிலையில், சிலர் எவரெஸ்ட் சிகரத்துக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருகின்றனர் என்று கூட சொல்லலாம்.

நேபாளைச் சேர்ந்த காமி ரிட்டா செர்பா (Kami Mitta Sherpa) என்பவர் மே 8ம் தேதி 25வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்தார். அதன்தொடர்ச்சியாக நேபாளைச் சேர்ந்த மற்றொருவரும் இன்னொரு உலக சாதனையை படைத்துள்ளார். 4 நாட்களுக்குள்ளாக குறுகிய நேரத்தில் 2 முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் நபர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். மிங்மா டென்ஜி ஷெர்பா (Mingma Tenji Sherpa) என்ற 43 வயதான நபர் நேபாளில் Seven Summit Treks அமைப்பின் சேர்மேனாக இருந்து வருகிறார்.

உலகம் முழுவதும் இருந்து வரும் பல்வேறு நாட்டு பயணிகளுக்கு எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கான பயண வழிகாட்டியாக இவரும், அவரது குழுவினர் உள்ளனர். மே 7 ஆம் தேதி எவரெஸ்ட்டுக்கு சென்ற குழுவுடன் பயணித்த மிங்மா டென்ஜி ஷெர்பா, அடுத்த 3 நாட்களுக்குள்ளாக மற்றொரு குழுவுடன் மீண்டும் எவரெஸ்ட் சிகரத்துக்கு பயணிக்க தொடங்கினார். பக்ரைன் நாட்டின் இளவரசர் ஷேக் முகமது ஹமாத் முகமது அல் கலிஃபா (Sheikh Mohammed Hamad Mohammed Al Khalifa) தலைமையிலான 16 பேர் கொண்ட குழுவுக்கும் மிங்மா டென்ஜி ஷெர்பா வழிகாட்டியாக சென்றார்.

மே 11ம் தேதி காலை இந்த குழு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தது. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டராக உயர்த்தப்பட்ட பிறகு, புதிய உயரத்தை அடைந்த முதல் வெளிநாட்டு குழு என்ற சிறப்பை பக்ரைன் இளவரசர் தலைமையிலான குழ பெற்றது. மேலும், குறுகிய நேரத்தில் 2 முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் நபர் என்ற சாதனையை மிங்மா டென்ஜி ஷெர்பா படைத்தார். இதற்கு முன்னதாக இந்திய மலையேற்ற வீராங்கனையான அனுஷூ ஜாம்ஷென்பா இந்த சாதனையை படைத்திருந்தார்.

2017ம் ஆண்டு 118 மணி நேரம், 15 நிமிடங்களில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, குறுகிய மணி நேரத்தில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தை அடந்தவர் என்ற உலக சாதனையை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனை தகர்க்கப்பட்டிருந்தாலும், குறுகிய நேரத்தில் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண் என சாதனை அவர் வசம் உள்ளது. 1954 ஆம் ஆண்டு இந்தியா அளவீடு செய்ததன் அடிப்படையில் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் இருந்து வந்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனா மற்றும் நேபாளம் கூட்டாக இணைந்து மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை கணக்கீடு செய்து புதிய உயரத்தை அறிவித்தனர். அதன்படி, முந்தைய உயரத்தை விட 86 சென்டி மீட்டர் கூடுதலாக சேர்க்கப்பட்டு 8,848.86 மீட்டர் என்ற புதிய உயரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எவரெஸ்டின் உயரம் கணக்கீடு செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், அந்த உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன என கருதி நேபாளம் மீண்டும் எவரெஸ்டின் உயரத்தை கணக்கீடு செய்ய முடிவெடுத்தது.



ALSO READ ;

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்