நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இது பறவையா? கடல் சிலந்தியா? மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ;

பவளப்பாறைகள் மத்தியில் இருந்து மேலே எழும்பும் இந்த உயிரினத்தின் வீடியோ தான் தற்போது வைரல் ஹிட் என்று கூட கூறலாம்.
இயற்கை மதிப்பிடவே முடியாத பல்வேறு அழகான, பேரழகான ரகசியங்கள தங்களுக்குள்ளவே வைத்திருக்கு… என்றாவது அதியசமா, ரொம்ப அதிசயமா தன்னுடைய ரகசியத்தை உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் மனிதனுக்கு காட்டும் போது உலகத்தில் இருக்கும் அத்தனை பேரும் அதை பார்த்து பிரமிச்சு தான் போய்விடுகின்றோம்.

அப்படியான ஒரு அரியவகை உயிரினத்தை படம் வீடியோவாக வெளியிட்டுள்ளார் வீடியோ கலைஞர் மார்செலோ ஜோஹன் ஒகட்டா. கோமட்டுலிடா (Comatulida) என்ற இந்த உயிரினம் பார்ப்பதற்கு ஒரு பெரிய வகை சிலந்தி போல் இருந்தாலும் கடலுக்குள் வாழும் ஒரு உயிரினம் இது.


8க்கும் மேற்பட்ட இறக்கைகளை கொண்ட இந்த உயிரினத்தின் உடல் இறக்கைகள் அனைத்தும் இணையும் மையப்பகுதியில் அமைந்துள்ளது. வாய் மேற்புறம் அமைந்திருக்கும் இந்த உயிரினம் அழகாக நீந்துவதை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

பி.பி.சி. எர்த் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பவளப்பாறைகள் மத்தியில் இருந்து மேலே எழும்பும் இந்த உயிரினத்தின் வீடியோ தான் தற்போது வைரல் ஹிட் என்று கூட கூறலாம். வெளியிடப்பட்ட ஒரு நாளில் கிட்டத்தட்ட 15 லட்சம் நபர்கள் இன்ஸ்டகிராமில் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்