நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆழ்கடலில் இரையை தேடிவந்த இராட்சத ஸ்க்விட்... முதன்முதலில் பதிவுசெய்யப்பட்ட வைரல் காட்சிகள் வெளியீடு!

20 அடி உயரம் கொண்ட இந்த உயிரினம் விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்ட ஒரு போலி ஜெல்லிமீனை வேட்டையாடுவதைக் வீடியோவில் காணலாம்.
கடல் பாலூட்டிகள் இரைக்காக பதுங்கியிருந்து தாக்குதலைக் நடத்தும் என்று விஞ்ஞானிகள் முன்னர் வெளியிட்டிருந்த கருத்துக்களுக்கு முரணாக, இரையை கொல்ல செல்வதற்கு முன்னர் ஒரு மாபெரும் ஸ்க்விட் தனக்கான இரையைத் தேடுவதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

உண்மையில் ஸ்க்விட் தனது இரைக்காக வேட்டையாடும் காட்சிகள் கேமராவில் பதிவு செய்யப்பட்டன. 20 அடி உயரம் கொண்ட இந்த உயிரினம் விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்ட ஒரு போலி ஜெல்லிமீனை வேட்டையாடுவதைக் வீடியோவில் காணலாம். இது மெக்ஸிகோ வளைகுடாவில் 2,500 அடி ஆழ்கடலில் நிகழ்ந்ததாக மெயில் ஆன்லைன் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆச்சர்யமாக, ஆர்க்கிடூதிஸ் டக்ஸின் வேட்டை திறன்களை சித்தரிக்கும் இந்த வீடியோ விஞ்ஞானிகளால் முதன் முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏனெனில் இந்த உயிரினங்கள் கடலுக்கு கீழே ஆயிரக்கணக்கான அடி ஆழத்தில் இருப்பதால் இதனை புகைப்படம் எடுப்பது மிகக்கடினம். மேலும் அவை வாழும் இடம் பொதுவாக இருட்டாக இருக்கும் மற்றும் நீரின் தீவிர அழுத்தத்தை கண்காணிக்க சிறப்பு உபகரணங்கள் தேவைப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடல் ஆராய்ச்சிக்காக உயிரியலாளர்கள் மெக்ஸிகோ வளைகுடாவின் கீழ் 2,500 அடி ஆழத்தில் ஒரு உள்ளமைக்கப்பட்ட கேமராவுடன் ஒரு சிறப்பு கூண்டை அனுப்பியுள்ளனர். அதன் மேல் ஈ-ஜெல்லி எனப்படும் போலி ஜெல்லிமீன்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும் அந்த போலி ஜெல்லி மீன்கள் பயோலுமினசென்ட்டை வெளியிட்டது. பயோலுமினென்சென்ஸ் என்பது ஒரு உயிரினத்தால் வெளியிடப்படும் ஒளியின் உற்பத்தி மற்றும் உமிழ்வு ஆகும். இது கெமிலுமுமின்சென்ஸின் ஒரு வடிவம் என்று கூறப்படுகிறது. பொதுவாக துன்பத்தில் இருக்கும் ஒரு ஜெல்லிமீன் இதனை வெளியிடுமாம்.

இந்த காட்சிகள் 2019ல் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அண்மையில் ஆராய்ச்சியாளர்களால் ஸ்க்விட்களின் தாக்குதல் முறையை மதிப்பிட்ட பின்னர் இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த மாபெரும் கடல் பாலூட்டி தனது இரையை வெளிப்படையாகப் பின்தொடர்வதையும், அதன்பிறகு இறுதித் தாக்குதலுக்குச் செல்வத்தையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.

ஆழ்கடலில் வசிக்கும் மாபெரும் ஸ்க்விட் தனது வாழ்விடங்களில் தாக்குதல் திறன்களை வெளிப்படுத்திய முதல் வீடியோ இதுவாகும். மற்றவை பல இறந்த ஸ்க்விட் உயிரினங்கள் கரையை வந்தடையும் போது எடுக்கப்பட்டதாகவே இருந்தது. இதற்கு முன்னதாக, 2004ம் ஆண்டு ஒரு உயிருள்ள ராட்சத ஸ்க்விட்டின் முதல் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அந்த வீடியோ கூட 2012ம் ஆண்டில் தான் வெளியிடப்பட்டது.


இந்த உண்மைகள் அனைத்தும் மாபெரும் ஸ்க்விட்களைப் பற்றிய அறியப்படாத ரகசியங்களை ஆராய்வதற்கான பரந்த சாத்தியக்கூறுகளை ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்குகின்றன. இந்த கடல் ராட்சதர்களைப் பற்றி விஞ்ஞானிகள் அறிந்திருப்பது அவற்றின் வளரக்கூடிய திறனை பற்றித்தான். இந்த மழுப்பலான உயிரினங்கள் 40 அடிக்கு மேல் வளரக்கூடியவை. மேலும் கூடைப்பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் பந்தை போல பெரிய கண்கள் இவற்றிற்கு உள்ளன.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்