நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ATM-ல் பணம் சிக்கி விட்டதா; இதைச் செய்தால் பணம் மீண்டும் கிடைக்கும்.......

 ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது இயந்திரத்திலேயே பணம் சிக்கிக் கொண்டு விட்டால், அச்சப்படத் தேவையில்லை. ரிசர்வ் வங்கி பணத்தை திரும்ப பெற சில விதிமுறைகளை வகுத்துள்ளது. 


  • ஏடிஎம் பயன்படுத்துவோருக்கு பயனுள்ள செய்தி.
  • ஏடிஎம்மில் பணம் சிக்கினால் இந்த முறையை பின்பற்றவும்.
  • ஏழு நாட்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

வங்கிக்கு சென்று பணம் எடுக்கும் காலம் மலை ஏறி விட்டது. இன்றைய காலக்கட்டத்தில், பெரும்பாலான மக்கள் பணம் எடுக்க ஏடிஎம்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், பணம் எடுக்கும்போது ஏடிஎம்மிலேயே பணம் மாட்டிக்கொள்கிறது போன்ற செய்திகளை நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருக்க கூடும். 

இதுபோன்ற சூழ்நிலையில், பலர் பதற்றமடைந்து மீண்டும் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை  வெளியே எடுக்க முயற்சிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் நீங்கள் பீதி அடைய தேவையில்லை.  ஏடிஎம்மில் சிக்கிய பணத்தை திரும்பப் பெறுவதற்கான வழியை  அறிந்து கொள்ளலாம்.

வங்கியை தொடர்பு கொள்ளும் முறை

கணக்கு வைத்திருப்பவர் தனது வங்கி ஏடிஎம் அல்லது வேறு எந்த வங்கியின் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும் போது பணம் வரவில்லை என்றாலோ, பணம் வராமலேயே கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டாலோ, அருகிலுள்ள வங்கி கிளையை தொடர்பு கொள்ளவு வேண்டும் என ரிசர்வ் வங்கியின் விதிகள் கூறுகின்றன. வங்கி மூடப்பட்டிருந்தால், வங்கியின் வாடிக்கையாளர் சேவையை அழைத்து அதைப் பற்றி உடனே தெரிவிக்கவும். உங்கள் புகார் பதிவு செய்யப்படும். இதற்காக வங்கிக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும்.

பரிவர்த்தனை சீட்டு

ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும்போது, ​​உங்கள் பரிவர்த்தனை தோல்வியடைந்திருக்கலாம். அப்போது  நீங்கள் அதன் பரிவர்த்தனை சீட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். எனவே சீட்டை எடுக்க மறக்காதீர்கள். சில காரணங்களால் சீட்டை எடுக்க முடியாவிட்டால், நீங்கள் வங்கி ஸ்டேட்மெண்டையும் கொடுக்கலாம். பரிவர்த்தனை சீட்டு முக்கியமானது. ஏனெனில் அதில், ஏடிஎம் ஐடி, இடம், நேரம் மற்றும் வங்கியிலிருந்து வந்த பதில் குறியீடு ஆகியவற்றை அச்சிடுகிறது.

வங்கி 7 நாட்களுக்குள் பணத்தைத் திருப்பித் தரும்

மேலே குறிப்பிட்டுள்ளது போன்ற வழக்குகளைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்பு வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது. இதன்படி, இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வங்கி 7 நாட்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பித் தர வேண்டும். ஒரு வாரத்திற்குள் வங்கி உங்கள் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றால், அதற்காக நீங்கள் வங்கிக் குறைதீர்ப்பாளரை அணுகலாம். 7 நாட்களுக்குள் வங்கியால் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பித் தர முடியவில்லை என்றால், அதன் பிறகு வங்கி வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு ரூ.100  என்ற வீதத்தில் பணத்தை திரும்ப செலுத்த வேண்டும்.


ALSO READ ; இத்தனை நாடுகள் ஆங்கிலத்தை தாய்மொழியாக பேசுகின்றனரா?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!