உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் அணியும் ஆடைகளில் ஜீன்ஸும் ஒன்றாகும். எந்த ஒரு விழா மற்றும் நிகழ்ச்சியிலும் மிகவும் வசதியாக அணிந்து கொள்ளக்கூடிய உடைகளின் வரிசையில் ஜீன்ஸ்க்கு முதலிடமே கொடுக்கலாம்.
ஒவ்வொருவருடைய துணி அலமாரியிலும் குறைந்த பட்சம் ஒரு ஜீன்ஸாவது இல்லையென்றால் அது சிறிது வருத்தத்தை அளிக்கக் கூடிய விஷயம் தான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். எந்த ஒரு விழா மற்றும் நிகழ்ச்சியிலும் மிகவும் வசதியாக அணிந்து கொள்ளக்கூடிய உடைகளின் வரிசையில் ஜீன்ஸ்க்கு முதலிடமே கொடுக்கலாம். உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் அணியும் ஆடைகளில் ஜீன்ஸும் ஒன்றாகும். எந்தவித மேலாடைக்கும் பொருந்துவதால் அனைவராலும் விரும்பி அணியப்படும் பாட்டம் என்ற பெருமையுடன் ஜுன்ஸைச் சாரும்.
ஜுன்ஸைப் பொருத்தவரை பல்வேறு வகைகள் உள்ளன.
பெல் பாட்டம் ஜுன்ஸ்:-
இவ்வகை ஜுன்ஸ்கள் முதல் கால்கள் வரை குறுகலாகவும் முழங்காலில் இருந்து கனுக்கால் வரை சில நேரங்களில் தரையைத் தொடும் அளவிற்கு மணி போன்ற வடிவத்தில் அகன்று பரவியிருக்கும். எழுபதுகளிலிருந்து இன்று வரையும் பேஷன் உலகில் கர்ஜிக்கும் வகையாக இந்த பெல் பாட்டம் ஜீன்ஸ்கள் இருக்கின்றன. ஆண், பெண் என இருபாலரும் அணிந்து கொள்ள ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்வெட்டர்ஸ், க்ராப் டாப், டீ ஷர்ட்டுகளுக்கு சிறந்த பாட்டமாக இவை செயல்படுகின்றன.
லோ வெயிஸ்ட் ஜீன்ஸ்:-
இவை குறைந்த இடுப்பு இறக்கத்துடன் கணுக்கால் வரை சிக்கெனப் பிடித்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டவையாகும். இவ்வகை ஜுன்ஸ்கள் இப்பொழுது மிகவும் பிரபலமாக உள்ளன. தட்டையாக உள்ள செருப்புகள், ஸ்னீக்கர்கள் மற்றும் குதிகால் செருப்புகளுடன் அணியும் பொழுது இவை மேலும் அழகு சேர்க்கின்றன. ஆண், பெண் என இருபாலரும் அணியக்கூடியவை இவை.
3டி எஃபெக்ட் பேனல் ஜுன்ஸ்:- இளவயதினர் சாதரணமாக அணிந்து கொள்ளக்கூடிய சரியான தேர்வு என்று சொல்லலாம். 3டி வெட்டுகளுடன் உங்கள் கால்களுக்கு வசதியாகப் பொருந்தும் இவற்றை ஆண், பெண் என இரு பாலரும் அணியும் பொழுது அவர்களது வயது சிறிது குறைத்துக் காட்டப்படுவதாக பரவலாகக் கூறப்படுகின்றது. ஸ்லோகன் பிரிண்ட் டீ-ஷர்ட்டுகளுடன் இவை கச்சிதமாகப் பொருந்தக் கூடியவை.
டேப்பர்டு ஜுன்ஸ்:-
இவை தொடைப்பகுதியில் அகன்றும் கணுக்காலில் குறுகலாகவும் இருப்பவையாகும். நீளமான கால்களை உடையவர்கள் அணிய ஏற்றவை இவை. ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்ற வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
க்ராப்டு ஜுன்ஸ்:-
சரியான நவீன தொடுதலுடன் கணுக்கால் வரை நீண்டிருக்கும் இவை கச்சிதமான உடல்வாகுடைய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மிகவும் பொருத்தமானவை என்று சொல்லலாம்.
ஹை வெயிஸ் ஜுன்ஸ்:-
மேல் இடுப்பிலிருந்து தொடங்கும் இவ்வகை ஜுன்ஸ்கள் ஒல்லியான தோற்றத்தைத் தரக் கூடியவையாகும். சாதாரணமான பயணத்திற்கு ஏற்றவையாக இருப்பதால் இருபாலரும் அணியக்கூடிய ஆடையாக இது உள்ளது.
ட்ராப் க்ராட்ச் ஜுன்ஸ்:-
இடுப்பு இருக்கை மற்றும் பின்புறத்தில் தொய்வாக இருக்கும் இவை மெல்லிய தளர்வாக ஃபிட்பேன்ட் ஆகும். இவ்வகை டெனிப்கள் குளிர்ச்சியான புதுப்பானியுடன் கூடிய தோற்றத்தைத் தருபவை என்று சொல்லலாம். அனைவராலும் விரும்பி அணியப்பட்டாலும் தடகள உடல் தோற்றமுடையவர்களுக்கு கச்சிதமான தோற்றத்தை தரக்கூடியவையாக இவை உள்ளன.
செய்லர் ஜுன்ஸ்:-
பெண்கள் மட்டுமே அணியக்கூடிய இவ்வகை ஜுன்ஸ்களானது மேல் இடுப்பிலிருந்து துவங்கி முன்புறம் பட்டன்களை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அணிவதற்கு வசதியானவையாக இருப்பதோடு நாகரீகத் தோற்றத்தையும் தரக்கூடிய இந்த ஜுன்ஸ்கள் எழுபதுகளிலிருந்து இன்று வரையிலும் பிரபலமாக உள்ளது.
புஸ் பேன்ட் ஜுன்ஸ்:-
அடிப்படையில் நேராகப் பொருந்தும் வகையான இவ்வகை டெனிம்கள் ஆண்களுக்கே வடிவமைக்கப்பட்டது போல் இருக்கின்றது. முன்புறமும், பின்புறமும் இரண்டு இரண்டு பாக்கெட்டுகளுடன் வரும் இவ்வகை ஜுன்ஸ்களுடன் லெதர் ஜாக்கெட் மற்றும் டி-ஷர்ட்டுகளை அணியும் பொழுது அணிபவரின் தோற்றம் நவ நாகரீகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
ஸ்லிம் ஃபிட்:-
தொடை பின்னங்கால் மற்றும் கணுக்கால் வரையிலும் உடலுடன் ஒட்டிப் பிடிக்கும்படி இறுக்கமாக வரும் இவ்வகை ஜுன்ஸ்கள் இள வயது ஆண், பெண்களால் மிகவும் விரும்பி அணியக்கூடியதாகவும், நாகரீக தோற்றத்தைத் தருவதாகவும் உள்ளது.
ஜாகர்:-
குறிப்பாக ஜாகிங் செய்யும் பொழுது வசதியாக இருப்பதற்காக இடுப்பு மற்றும் கணுக்காலில் எலாஸ்டிக்கானது கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டவை இவை. நகர்புறத் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் இவற்றை வேலைக்கு விடுப்பு இருக்கும் நாட்களில் அணிந்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் இயல்பாகச் செல்லலாம்.
ஸ்ட்ரெயிட் ஃபிட் ஜுன்ஸ்:- இடுப்பிலிருந்து கணுக்கால் வரை ஒரே அளவாக நேராக வெட்டப்பட்டு தைக்கப்பட்டிருக்கும் இவை அனைத்து மேலாடைகளுடனும் அணிய ஏற்றவை. அணிவதற்கு வசதியான ஜுன்ஸ்களாக இவை இருப்பதால் அனைத்து வயதினாராலும் விரும்பி அணியப்படுபவை என்ற பெருமைக்குரியது இவை என்று சொல்லலாம்.
ஸ்கின்னி ஜுன்ஸ்:-
இடுப்பு தொடை பின்னங்கால் மற்றும் கனுக்கால் வரை உடலுடன் சிக்கென ஒட்டிப் பிடித்திருக்கும் இவற்றில் கணுக்காலில் கட்டுடன் வருபவையும் பெண்களால் விரும்பி அணியப் படுபவையாக உள்ளன.
பூட்கட் ஜுன்ஸ், பாய் ஃப்ரண்டு ஜுன்ஸ், ஃப்னேர்டு ஜுன்ஸ், பெக்குடு ஜீன்ஸ், வைட் லெக் ஜீன்ஸ், ஸ்டிர்அப் ஜீன்ஸ், பேச்சுடு ஜீன்ஸ், ரிப்டு ஜீன்ஸ் என ஜீன்ஸ்களில் இன்னும் எத்தனையோ வகைகள் உள்ளன. நம்முடைய உடல் தோற்றத்திற்கு ஏற்றாற் போலவும், அணிவதற்கு வசதியாகவும் இருப்பவற்றைக் தேர்ந்தெடுத்து அணியும் பொழுது நம் தோற்றத்தை மேலும் இவை மேம்படுத்தும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
Comments
Post a Comment