நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இருக்கு ஆனா இல்ல - இந்த புகைப்படத்தில் முதலில் தெரிந்தது என்ன?

இந்த படத்தில் உங்களுக்கு முதலில் என்ன உருவம் தெரிந்தது. உங்கள் கண்கள் கவனித்த முதல் உருவம் உங்களுடைய பலம் மற்றும் பலவீனங்களைக் குறிக்கும்.
நம்முடைய ஆளுமை, குணநலன்கள், பலம் மற்றும் பலவீனங்களை எளிதாகத் தெரிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் 'Optical Illusion'. ‘இருக்கு ஆனா இல்ல’ என்று கூறுவது போல, ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும். அதே போல இங்கே ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் (மாயை) புகைப்படம் உள்ளது. இந்த படத்தில் உங்களுக்கு முதலில் என்ன உருவம் தெரிந்தது. உங்கள் கண்கள் கவனித்த முதல் உருவம் உங்களுடைய பலம் மற்றும் பலவீனங்களைக் குறிக்கும்.

மேலே உள்ள புகைப்படத்தில் நீங்கள் முதலில் கண்டது என்ன.?

1. மனித முகம்

2. புத்தகம் வாசிக்கும் பெண்

3. ஒரு மேசை

4. ஒரு நாற்காலி

உங்கள் கண்களுக்கு முதலில் தெரிந்தது மனித முகம் என்றால்..

நீங்கள் உணர்ச்சிகளில் மற்றும் மன உறுதியில் சமநிலையுடன் இருப்பீர்கள். கடினமான சூழ்நிலைகளை உடைந்து போகாமல் எளிதாக சமாளிக்க முடியும். நீங்கள் எந்த சவால்களுக்கும் அச்சப்பட வேண்டாம். ஆனால் எல்லாவற்றையும், நிலைத்தன்மை மற்றும் திருப்தியுடன் இருக்க வேண்டும். உங்களுடைய இந்த பண்பு பலரையும் ஊக்குவிக்கிறது. இருப்பினும், எல்லோருக்கும் இருப்பது போலவே உங்களுக்கும் சில குறைபாடுகள் உள்ளன. நீங்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படும் போது, உங்களிடமிருந்து விலகிச் செல்கிறீர்கள். சாதாரண சூழ்நிலைகளில் கூட, நீங்கள் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, அவற்றை வெளிப்படுத்த மறுக்கிறீர்கள். இது உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து உங்களை விலகி இருக்கச் செய்கிறது.

உங்கள் கண்களுக்கு முதலில் தெரிந்தது புத்தகம் வாசிக்கும் பெண் என்றால்..

நீங்கள் மிகவும் புத்திசாலி. நிறைய கற்றுக்கொள்ள பிடிக்கும், எப்போதும் ஒரு தேடல் இருக்கும். புதிய விஷயங்களை, இடங்களை, மனிதர்களை தெரிந்து கொள்ள விரும்புவீர்கள். உங்களுக்கு எதைப் பற்றியாவது ஆர்வம் ஏற்பட்டால், எப்பாடுப்பட்டாவது அதைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிப்பீர்கள். ஆனால், ஆர்வமில்லாத விஷயத்தில் இருந்து விலகி இருப்பது உங்களுடைய பலவீனம். அதே போல, உங்கள் விருப்பம் மற்றும் ஆர்வங்களுக்கு ஒத்து வராத நபர்கள் மற்றும் சூழலில் இருந்து விலகி சென்றுவிடுவீர்கள்.

உங்கள் கண்களுக்கு முதலில் தெரிந்தது ஒரு மேசை என்றால்..

வெள்ளைத் துணியுடன் உள்ள மேசை தெரிந்தால், நீங்கள் எல்லா விஷயத்தையும் காது கொடுத்து கேட்பவர். உங்கள் புரிதலை அதிகரிக்க மற்றவர்கள் சொல்வதை பொறுமையாக கேட்பீர்கள். உங்கள் கேட்கும் திறனால், பலரும் எளிதாக ஈர்க்கப்படுகிறார்கள். உங்கள் தகவல் தொடர்பு திறன் சிறப்பாக இருந்தாலும், உங்களின் முடிவெடுக்கும் திறன் உங்களின் பலவீனம் ஆகும். ஒரு சூழ்நிலையின் நன்மை தீமைகளைப் பற்றி ஆராய்ந்து, ஒரு செயலைச் செய்ய உங்களால் உதவி செய்ய முடியும். ஆனால் அது உங்களுக்காக என்று வரும்போது, ​​ஒரு படி பின்னே செல்கிறீர்கள்.

உங்கள் கண்களுக்கு முதலில் தெரிந்தது ஒரு நாற்காலி என்றால்..

வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு தனிப்பட்ட மற்றும் வித்தியாசமான பார்வை உள்ளது என்பதை அது வெளிப்படுத்துகிறது. கடினமான சூழ்நிலைகளிலும் உங்களால் வித்தியாசமான கண்ணோட்டத்தை பார்க்க முடியும். எனவே, அதை நீங்கள் மிகவும் எளிதாக மற்றும் சிறப்பாக சமாளிக்க முடியும். இருப்பினும், உங்களால் ஒரு விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாது. இது தான் உங்கள் மிகப்பெரிய பலவீனம். உங்களைச் சுற்றியுள்ள சூழல்களால் நீங்கள் அடிக்கடி திசைதிருப்பப்படுவீர்கள்.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்