நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குப்பைமேனியின் அசர வைக்கும் மருத்துவ பலன்கள்......

 இயற்கையில் எளிதாக கிடைக்கும் குப்பைமேனியின் மருத்துவ பலன்கள் குறித்து இங்கு காண்போம்.


அரிமஞ்சிரி, அண்டகம், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, போன்ற பெயர்களில் குப்பைமேனி அழைக்கப்படுகிறது. இது காடுமேட்டில் எங்கும் காணப்படும். இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர வல்லது.

மருத்துவ குணங்கள்:

  • குப்பைமேனி நெஞ்சுக்கோழையை நீக்கும், இருமலைக் கட்டுப்படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மை குப்பைமேனிக்கு உண்டு.
  • குப்பைமேனியின் இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும், வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. இதன் இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலை வலி நீங்கும்.
  • குப்பைமேனி இலையுடன் சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்று நேரம் கழித்து குளிக்க தோல் நோய் அனைத்தும் குணமாகும். மேலும் குப்பைமேனி வயிற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை போக்கவல்லது.
  • இதன் வேரை 200 கிராம் அளவில் எடுத்துக் கொண்டு நீரில் காய்ச்சி, அதனை குடிநீராக அருந்த உடலில் இருந்து பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.

குப்பைமேனி இலையின் இதர பலன்கள்:

  • குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும். அத்துடன் வயிற்றுப் புழுவைக் கொல்லும்.
  • குப்பைமேனி இலையை எடுத்து சாறு பிழிந்து, 200 மில்லியளவு எடுத்து அதே அளவு நல்லெண்ணெயுடன் கலந்து, தைல பதமாகக் காய்ச்சி இறக்கி, பின் வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.
  • குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து, அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டை வாந்தியில் வெளியேற்றும். குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.
  • குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து, ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி உடல் நலம் பெறும்.

முக அழகிற்கு பயன்படும் குப்பைமேனி

  • இளம்பெண்களுக்கு முகத்தில் வரும் தேவையற்ற முடிகளை குப்பைமேனியைக் கொண்டு நீக்கலாம்.
  • குப்பைமேனி இலைகளை 10 வீதம் எடுத்து, விரலி மஞ்சளை சேர்த்து அரைத்து, இரவு தூங்கும்போது முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். மறுநாள் காலை உலர்ந்து, அவை முடியோடு உதிர்ந்து வெளியேறும்.
  • மேலும் இவ்வாறு தொடர்ந்து 2 வாரங்கள் தடவி வந்தால் முகத்தில் இருக்கும் முடி உதிர்வதைப் பார்க்கலாம். பருக்களை நீக்க பயன்படும் குப்பைமேனி முகத்தின் அழகை சீர்குலைக்க செய்யும் பருக்களை குப்பைமேனி கொண்டு நீக்கலாம்.
  • குப்பைமேனி இலையுடன் கற்றாழை சாறு கலந்து இரண்டையும் மசித்து, சிட்டிகை மஞ்சள் சேர்த்து பின் முகப்பருக்கள் இருக்கும் இடங்களில் பற்று போட வேண்டும். அவை உலர்ந்ததும் முகத்தை மந்தமான நீரில் கழுவினால் முகத்தில் பருக்கள் குறைய தொடங்கும்.

அம்மை தழும்புகள்

குப்பைமேனி இலையை இடித்து அதில் மஞ்சள், கற்றாழை சாறு, ஒரு பல் பூண்டு சேர்த்து மசிய அரைத்து, முகத்தில் தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும், இவ்வாறு தொடர்ந்து செய்துவர முகத்தில் உள்ள தழும்புகள், புண்கள், வடுக்கள் குணமாகும்.

மூலிகை பேஷியல்

  • குப்பைமேனி இலைகளை கொண்டு முகத்திற்கு பேஷியலும் செய்யலாம். இதற்காக குப்பைமேனி இலைகளை 15 என்ற அளவிலும், 15 புதினா இலைகளையும், சிறிதளவு துளசி, வேப்பிலை இலைகள் 5, கெட்டி தயிர் அல்லது சிறிதளவு பசும்பால் மற்றும் வைட்டமின் இ ஆயில் மாத்திரை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • முதலில் இலைகளை சுத்தம் செய்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த கலவை உடன் தயிர் சேர்த்து மசிய அரைத்து, அதனுடன் வைட்டமின் இ ஆயில் மாத்திரையை கலந்து குழைக்க வேண்டும்.
  • பிறகு முகத்தை சுத்தம் செய்து முகம் முதல் கழுத்து வரை pack போடவும். அரை மணிநேரம் வரை உலரவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • இந்த பேக்கில் உள்ள புதினா சருமத்தை சுருக்கமில்லாமல் பொலிவாக்கும். குப்பைமேனி இலை முகத்தில் கரும்புள்ளிகள் இல்லாமல் செய்கிறது. தயிர், இயற்கையான ப்ளீச் போன்று செயல்பட்டு முகத்தை சுத்தமாக்குகிறது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்