Sun Tanning ஆல் ஏற்படும் சரும பாதிப்புகளிலிருந்து விடுபட வேண்டுமா? சூப்பரான சில டிப்ஸ்
- Get link
- X
- Other Apps
பெரும்பாலான மக்களின் சருமம் வெயிலில் அலைய துவங்கும் 1 முதல் 2 மணி நேரத்திற்குள் டேனிங்காகி விடும்.
அடிக்கும் வெயிலுக்கு நீங்கள் என்ன தான் சன்ஸ்கிரீனை பயன்படுத்தினாலும் சூரிய கதிர்களால் சருமத்தில் ஏற்படும் கருமை அல்லது பழுப்பு நிறமாற்றத்தை போக்குவது கடினமாகும்.
வெயில் இன்னும் வெளுக்க போவதால் சன் டேனிங்கிற்கான வீடு வைத்தியங்களை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
லெமன் ஜூஸ், ரோஸ் வாட்டர் மற்றும் வெள்ளரி ஜூஸ் உள்ளிட்டவற்றின் கலவையை முகத்தில் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம்..
சிறிது தேன் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து சருமம் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவுவது சிறந்தது.
சிறிது பச்சை பால், மஞ்சள் மற்றும் சிறிது லெமன் ஜூஸ் இவற்றை கலந்து ஒரு பேஸ்ட் தயார் செய்து இந்த கலவையை சருமத்தில் தடவி, அது காயும் வரை வைத்திருக்க வேண்டும். பின் சிறிது குளிர்ந்த நீரில் பேஸ்ட் தடவிய இடத்தை கழுவ வேண்டும்.
மோரில் சிறிதளவு ஓட்ஸ் கலந்து ஒரு கலவையை தயார் செய்து ஸ்கின் டேனிங்காகி இருக்கும் இடத்தில் தேய்த்து வரலாம்.
சிறிது கடலை மாவு, லெமன் ஜூஸ் மற்றும் சிறிது தயிர் கலந்து இந்த கலவையை சருமத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து தடவி வரவும்.
முழங்கைகள், முழங்கால்கள் அல்லது பேட்சஸ்கள் உள்ள பகுதிகளில் குறைந்தது 15 நிமிடங்கள் சிறிது ப்ரெஷ் லெமன் ஜூஸை தடவி ஊற வைத்து பின் கழுவுவது நல்லது.
கைகள் மற்றும் முகத்தில் ப்ரெஷ்ஷான தேங்காய் நீரை பயன்படுத்தும் வழக்கம் சருமத்தை மிருதுவாக மற்றும் மென்மை வைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பால் பவுடர், லெமன் ஜூஸ் , தேன் மற்றும் பாதாம் ஆயில் ஆகியவற்றின் சம அளவை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கிரீம் சிறந்த நிவாரணமாக இருக்கும்.
சிறிதளவு பப்பாளி பழத்தை மசித்து எடுத்து சன் டேனிங் உள்ள இடத்தில் மசாஜ் செய்து வரலாம்.
ஓட்ஸ், தயிர், சிறிதளவு லெமன் மற்றும் தக்காளி ஜூஸை கொண்டு பேஸ்ட் ஒன்றை தயார் செய்து பாதிப்பு உள்ள இடத்தில் தடவலாம். பின் அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் வித்தியாசம் தெரியும்.
முல்தானி மெட்டியுடன் சிறிதளவு பூசணி சாற்றை சேர்த்து முகம் முழுவதும் தடவி வருவது நல்லது.
ALSO READ : பெண்களிடையே பிரபலமாகி வரும் லைட்-வெயிட் மேக்கப்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment