நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஹேக்கிங் கலை - நல்லதும் செய்யும், கெட்டதும் செய்யும்...

கூகுள் தேடுதளத்தில் ஹேக்கிங் பயிற்சி என தேடினால், ஆன்லைன் வகுப்பு விவரங்கள் ஏராளமாக வந்து குவியும். இப்படி ஹேக்கிங் கலையை கற்க ஏராளமான வழிகள் இருக்கின்றன.
ஆன்லைன் தளங்களை முடக்குவதும், அதிலிருக்கும் தகவல்களை அவர்கள் அனுமதியின்றி புரட்டி பார்ப்பதும் ஹேக்கர்களின் வேலை. ஆனால் அத்தகைய ஹேக்கர்களின் பட்டியலில் வரும் ஆனந்த் பிரகாஷ் வித்தியாசமானவர். இவர் என்ன செய்கிறார் என்பதை அவரிடமே கேட்கலாம்.

‘‘ஹேக்கிங் பொருத்தமட்டில் இருவகை உண்டு. ஒன்று பிளாக் ஹேட் ஹேக்கர். அதாவது சமூக வலைத்தளம், இணையதளத்திற்குள் புகுந்து, அங்கிருக்கும் தகவல்களையும், டிஜிட்டல் பணத்தையும் திருடக்கூடியவர்கள். மற்றொன்று ‘ஒயிட் ஹேட் ஹேக்கர்'. இதுவும் அப்படிதான். பிரபல நிறுவனங்களின் இணையதளத்திற்குள் புகுந்து, அங்கிருக்கும் வலைதள கட்டமைப்புகளை ஆராய்வோம். அதில் ஏதாவது தொழில்நுட்ப ஓட்டைகள் இருக்கிறதா?, தகவல்களை திருட முகாந்தரம் இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து, அதை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். இவர்களைதான், ஒயிட் ஹேட் ஹேக்கர் என்கிறோம். நானும் இந்த ரகம்தான்’’ என்றவரிடம் ஹேக்கிங் பணியில் ஆர்வம் ஏற்பட்டதற்கான காரணத்தை கேட்டோம்.

அதற்கு அவர் ‘‘பெங்களூருவில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். பொறியியல் படிப்பை தொடங்கியபோது, அந்தகாலக்கட்டத்தில் மிக பிரபலமாக இருந்த ‘ஆர்குட்' சமூகவலைத்தளத்தில் கணக்கு வைத்திருந்தேன். என் நண்பனுக்கும் அதில் தனி கணக்கு இருந்தது. விளையாட்டாக என் நண்பனின் கணக்கிற்குள் நுழைந்து, என்னை பற்றி பெருமையாக கருத்து பகிர ஆசைப்பட்டேன். கூகுள் தேடுதளத்தில் அதுசம்பந்தமாக தேடியபோதுதான், ஹேக்கிங் பற்றி தெரிந்து கொண்டேன். ஆர்குட் தளத்தை எப்படி ஹேக்கிங் செய்வது?, அது சாத்தியமா? என பல தேடலுக்கு பிறகு, என் நண்பனின் கணக்கை உடைத்து, உள்நுழைந்தேன். அதுவே ஹேக்கிங் வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது’’ என்றார். அதோடு ஹேக்கிங் கலையை முழுமையாக கற்றுக்கொண்டதை விளக்குகிறார்.

‘‘ஆர்குட்டை தொடர்ந்து, அடுத்தடுத்த ஹேக்கிங் வித்தைகளை கற்றுக்கொள்ள, கூகுளை முழுவேகத்தில் சொடுக்கி விட்டேன். அதுவும் நிறைய ஹேக்கிங் தந்திரங்களை கற்றுக்கொடுத்தது. ஹேக்கிங் திறமைகளை வைத்து, பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணையதள பாதுகாப்பு குழுவில் பணியாற்றினேன். அந்த சமயத்தில் கிடைத்த அனுபவமும், ஹேக்கிங் துறையில் இருந்த கட்டுக்கடங்காத ஆர்வமும், என்னை அடுத்தடுத்த நிலைகளுக்கு கூட்டி சென்றது.

பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றினாலும், பிரபல நிறுவனங்களின் இணையதளங்களை அடிக்கடி ஆராய்ந்து, அதில் இருக்கும் சிக்கல்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தினேன். அந்த வேலைக்கு நல்ல சன்மானம் கிடைத்தது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் பலவீனத்தை தெரியப்படுத்தினேன். ரூ.2 கோடி சன்மானமாக கிடைத்தது. அதை தொடர்ந்து உபேர் சேவையைப் பயன்படுத்தும்போது, அதில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதியில் லேசான விஷமத்தனத்தைச் செய்து பணம் கொடுக்காமலேயே பயணம் செய்யும் வாய்ப்பு இருப்பதை நிறுவனத்துக்குச் சுட்டிக்காட்டினேன். ரொக்கப் பரிசு கிடைத்தது. வாய்ப்புகள் அதிகமாக இருந்ததால் முழுநேர ஒயிட் ஹேட் ஹேக்கராகவே மாறிவிட்டேன்’’ என்றவரிடம் ஹேக்கிங் கலையை முறையாக பயில முடியுமா..? என்ற கேள்வியை முன்வைத்தோம்.

அதற்கு அவர்...‘‘எல்லா மாநிலங்களிலும் ஹேக்கிங் பயிற்சி மையங்கள் உள்ளன. யூ-டியூப் தளத்தில் மொழி வாரியாக ஹேக்கிங் கலை பயிற்சி வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. கூகுள் தேடுதளத்தில் ஹேக்கிங் பயிற்சி என தேடினால், ஆன்லைன் வகுப்பு விவரங்கள் ஏராளமாக வந்து குவியும். இப்படி ஹேக்கிங் கலையை கற்க ஏராளமான வழிகள் இருக்கின்றன. ஹேக்கிங் பயில்வது தவறில்லை. ஆனால் ஹேக்கிங் கலையை தீயவழியில் உபயோகிப்பதுதான் தவறு. வெளிநாடுகளில் 10 வயதிற்குள்ளாகவே ஹேக்கிங் கலையை கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இந்தியாவில் ஹேக்கிங் பற்றிய புரிதலே 20 வயதில்தான் ஏற்படுகிறது. எங்கு, யாரிடம் ஹேக்கிங் பயில்வது என்பதிலும் இந்தியர்களுக்கு குழப்பம் நிலவுகிறது.

ஹேக்கிங் நல்லதும் செய்யும். கெட்டதையும் செய்யும். அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நம் வாழ்க்கையும், எதிர்காலமும் இருக்கிறது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்’’ என்ற அறிவுரையுடன் விடைபெற்றார்.

பேஸ்புக், டூவிட்டர் சமூக வலைத்தளங்களின் பலவீனத்தை தெரியப்படுத்தினேன். ரூ.2 கோடி சன்மானமாக கிடைத்தது. அதை தொடர்ந்து உபேர் சேவையைப் பயன்படுத்தும்போது, அதில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதியில் லேசான விஷமத்தனத்தைச் செய்து பணம் கொடுக்காமாலேயே பயணம் செய்யும் வாய்ப்பு இருப்பதை நிறுவனத்துக்குச் சுட்டிக்காட்டினேன்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்