நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இளைஞனே விழித்தெழுவாய்

இந்திய இளைஞனே! இன்னும் நீ சினிமா கவர்ச்சியிலும், மேலைநாட்டு நாகரிக மோகத்திலும் பயணம் போய்க் கொண்டிருந்தால் அடையப்போவது வசந்த வனத்தை அல்ல! பாலை வனத்தைத்தான்! இளமையை நெறிப்படுத்தி பாடுபட்டால்தான், வாழ்வுப் பயணம் இனிமை மிகு எதிர் காலத்தை வழங்கும்.
வாழ்க்கை பலப்பட...

ஒருவன் தமக்கென்று ஒரு வரலாற்றைத் துவக்கும் பருவமே இளமை. எதையும் செய்யும் ஆற்றல் மிக்கது இளமை. எனவே நன்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். அதுவே சிறப்புக்கு வழி.

உலகம் இதுவெனத் தெரிந்த பருவம் இளமை. ஆனால் உண்மை எதுவெனவும், பொய்க்கும் பொருள் எதுவெனவும் தெரியாப் பருவம். எனவே மனம்போல் துள்ளி மயக்கத்தில் வீழ்ந்து கிடக்காதே.

எப்பருவமும் இளமைப் பருவம்போல் இருப்பதில்லை. எப்போதும் இப்பருவம் நிலைத்து இருப்பதுமில்லை. எனவே இளமையை இனிதே பயன்படுத்து! வாழ்க்கையில் வளமையை பலப்படுத்து!

சாதிக்கும் காலம்

இளமை, வாழ்வின் குறைவான காலப்பகுதி; எனினும் நிறைவான இன்பம் தரும் பருவம்! இளவேனிற் பருவம். வாழ்க்கையில் மிகவும் தடுமாற்றம் ஏற்படக்கூடிய பருவமும் இளமைதான். எனவே இப்பருவத்தில் இளைஞர்கள் மிகவும் கவனத்துடனும், நல்லறிவுடனும் திறம்பட செயல்பட வேண்டும்.

இன்றைய இளைஞனே விழித்தெழுவாய்! உலகமே உன் கையில் என்பதை உணர்ந்து கொள்வாய்! இணைய தளத்திலும், எஸ்.எம்.எஸ்.களிலும், கைப்பேசிகளிலும் ஏன் இந்த மயக்கம், உன் ஆற்றலை ஆக்கத்திற்குப் பயன்படுத்து. உன் கடமையைக் கருத்தாய் செயல்படுத்து! உலகமே உன்னைத் தொடர வழிநடத்து! இளைஞர்களின் புகழினை இமயத்தின் மேல் நிலைநிறுத்து!

எழுச்சிமிக்க இளைஞனே! நீ நினைத்தால் இந்த இளமைப் பருவத்தில் சாதிக்க முடியாதது என்பது எதுவுமில்லை என்பதை நினைவில்கொள். உன் இளமைப்பருவ ஆற்றலினை பயன்படுத்தி இந்த உலகினை அமைதிப் பூங்காவாக மாற்றி அமைத்திடு இளைஞனே!

எழுந்திடு இளைஞனே!

தீமைகளை களைத்தெறியவும், தீவிரவாதத்தை வேரறுக்கவும், இந்த உலகினை அன்பால் வழி நடத்தவும் உன்னால் மட்டுமே முடியும்! இளமையில் செயல்படும் திறமும், வேகமும் அதிகம்தான். ஆனாலும் இளைஞனே உன் விவேகம் குறையக் கூடாது. சற்று சிந்தித்தே முடிவுகளை காண்.


நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் கனவினை இளைஞர்களாகிய நாம் நினைவாக்கிக் காட்ட வேண்டும். ஆம் இளைஞனே! நம் இந்திய நாடு வல்லரசாக, நல்லரசாக மாற வேண்டும். இதற்காக இந்திய இளைஞர்களாகிய நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.


விழிப்பதற்கே உறக்கம்!


வெல்வதற்கே தோல்வி!


எழுவதற்கே வீழ்ச்சி!


விதியை வெல்ல மதி கொள்!


மதி சேர நெஞ்சுறுதி கொள்!


பழையதை உதறி புதிய சரித்திரம் படைத்திடு. தடுக்கும் கற்கள் உன் விழிகளில் அகப்படாது. உன்னை வீழ்த்த எதிரிக்கும் வழி புலப்படாது. உன் லட்சியம் விழித்திருக்கட்டும். வெற்றிகள் குவியட்டும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்