நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Whatsappல் நம்பரை சேவ் செய்யாமல் மெசேஜ் அனுப்பலாம்! பலரும் எதிர்பார்த்த அப்டேட்......

 வாட்ஸ் அப் பயனாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த சூப்பர் அப்டேட் அவர்களுக்கு கிடைக்கவுள்ளது.


பொதுவாக உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் சேமிக்காத தொலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்ய வேண்டும் என்றால் அவரின் நம்பரை சேமித்தாக வேண்டும். ஆனால், அந்த நம்பரை சேமிக்காமலே வாட்ஸ்ஆப் தளத்தில் மற்றவருடன் தொடர்புகொள்ள ஒரு புது வசதியை கொண்டு வந்துள்ளனர்.

நீங்கள் சாட்-இல் சேமிக்கப்படாத தொலைபேசி எண்ணைப் பெற்றால், அந்த நபருக்கு நீங்கள் ஒரு செய்தியை அனுப்பலாம். வாட்ஸ்அப்-இல் அந்த நம்பருடன் உரையாட மற்றொரு ஆப்ஷனை வழங்கும். ஒருவேளை அந்த நபருக்கு கால் செய்ய விரும்பினால் அது உங்களை டயலர் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும். அதே போன்று, உங்கள் அட்ரஸ் புத்தகத்தில் ஃபோன் எண்ணைச் சேமிப்பதற்கான ஆப்ஷனும் இருக்கும்.

ஆனால், இதில் கால் மற்றும் டைரக்ட் மெசேஜ் ஆப்ஷன் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இதை பயன்படுத்தி அந்த நம்பரை சேமிக்காமலே சாட் செய்ய முடியும். மேலும் அந்த ஃபோன் எண் வாட்ஸ்அப்பில் இல்லை என்றால், மெசேஜிங் செயலி அதில் தோன்றும். அதை பயன்படுத்தி கொள்ளலாம்.


ஒருவேளை அந்த நம்பரை சேமிக்க விரும்பினால் சேமித்தும் கொள்ளலாம். தற்போது, மக்கள் சேமிக்கப்படாத தொலைபேசி எண்ணுக்கு செய்தி அனுப்ப http://wa.me/phone என்கிற லிங்க்-ஐ சென்று பார்க்கலாம்.

பொதுவாக வாட்ஸ்அப்பில் தெரியாத நபர்கள் அல்லது சேவை தொடர்பான எண்ணைச் சேமிப்பதற்கு பல நேரங்களில் நீங்கள் விரும்புவதில்லை. இது போன்ற சூழ்நிலைகளில் மேலே கொடுக்கப்பட்ட இணைப்பு பயன்படுத்தப்படுகிறது.

வாட்ஸ்அப்பின் 2.22.8.11 வெர்ஷனில் இந்த புதிய அப்டேட் வரவுள்ளது. மேலும் இது இன்னும் டெஸ்டிங் முறையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



ALSO READ : ட்விட்டரில் அதிக ஃபாலோவர்ஸை கொண்டுள்ள டாப் 10 பிரபலங்கள்.!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!