ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரர் ஆன எலான் மஸ்க் தான் ட்விட்டரில் மிகவும் பிரபலமான நபராக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் டெஸ்லா நிறுவனத்தின் இந்த தலைமை நிர்வாக அதிகாரி, ட்விட்டரில் அதிகம் பேர் ஃபாலோ செய்யும் பிரபலங்களின் பட்டியலில் டாப் 5 இடத்தில் இல்லை என்பது தான் உண்மை!
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் சிஇஓ ஆன எலான் மஸ்க் கடந்த வாரத்தில், அவருக்கு மிகவும் பிடித்த சமூக ஊடக தளமான ட்விட்டரின் 9.2 சதவீத பங்குகளை தன் வசமாக்கினார். இந்த நடவடிக்கையின் வழியாக, ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக உருமாறி உள்ளார் எலான் மஸ்க், மேலும் இவர் இந்த மைக்ரோ-பிளாக்கிங் தளத்தின் குழுமத்திலும் இடம் பெற்றுள்ளார். இப்படியாக எலான் மஸ்க் ட்விட்டரின் ஒரு ஷேர்ஹோல்டர் மற்றும் குழுமத்தின் ஒரு உறுப்பினர் மட்டுமல்ல, எலான் மஸ்க் ட்விட்டரில் மிகவும் பிரபலமான ஒரு நபரும் கூட!
எலான் மஸ்க்கை முன்னிறுத்தி யார் யாரெல்லாம் ட்விட்டரில் அதிக ஃபாலோவர்ஸை கொண்டுள்ளனர் என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள். ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரர் ஆன எலான் மஸ்க் தான் ட்விட்டரில் மிகவும் பிரபலமான நபராக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் டெஸ்லா நிறுவனத்தின் இந்த தலைமை நிர்வாக அதிகாரி, ட்விட்டரில் அதிகம் பேர் ஃபாலோ செய்யும் பிரபலங்களின் பட்டியலில் டாப் 5 இடத்தில் இல்லை என்பது தான் உண்மை!
முன்னாள் அமெரிக்க அதிபர் ஆன பராக் ஒபாமா தான், உலகில் யாரை விடவும் ட்விட்டரில் அதிக ஃபாலோவர்ஸை கொண்டுள்ளார். பாரக் ஒபாமாவை மொத்தம் 131.4 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள். இவரைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் பிரபல கனடிய பாடகர் ஆன ஜஸ்டின் பீபர் உள்ளார். ட்விட்டரில் இவரை மொத்தம் 114.3 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.
மூன்றாவது இடத்தில் அமெரிக்க பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆன கேட்டி பெர்ரி உள்ளார், இவரை மொத்தம் 108.8 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள். இந்த பட்டியலின் நான்காவது இடத்திலும் கூட மிகவும் பிரபலமான ஒரு பாடகி தான் உள்ளார், அது ரிஹானா ஆவார். நம்மில் பலருக்கும் பெரிய அளவிலான அறிமுகமே தேவைப்படாத ரிஹானாவை ட்விட்டரில் மொத்தம் 105.9 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.
ஐந்தாவது இடத்தில் உலக புகழ் பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். ட்விட்டரில் இவரை மொத்தம் 98.7 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள். ஆறாவது இடத்தில் எலான் மஸ்க் உள்ளார் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.
எலான் மஸ்க் 80.3 மில்லியன் ஃபாலோவர்ஸுடன் பட்டியலின் எட்டாவது இடத்தில் தான் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில், நமது இந்திய நாட்டின் பிரதமர் ஆன நரேந்திர மோடி உள்ளார். ட்விட்டரில் மோடியை மொத்தம் 77.6 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.
ஆறாவது இடத்தில் அமெரிக்க பாடகர்-பாடலாசிரியரான டெய்லர் ஸ்விஃப்ட்டும், ஏழாவது இடத்தை அமெரிக்க பாடகர்-பாடலாசிரியரான லேடி காகாவும் மற்றும் பத்தாவது இடத்தை அமெரிக்க நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகை, எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆன எலன் லீ டிஜெனெரஸும் பிடித்துள்ளனர்.
Comments
Post a Comment