நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இதில் மறைந்திருக்கும் குதிரை முகம் தெரிகிறதா? கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் கில்லாடி தான்..

உங்கள் மூளை எப்படி இயங்குகிறது மற்றும் மூளையை எப்படி டிரெயின் செய்யலாம் என்பதையும் ஆப்டிக்கல் இல்யூஷன் சோதனை மூலம் கற்றுக்கொள்ளலாம்.
நம்முடைய ஆளுமை, குணநலன்கள், பலம் மற்றும் பலவீனங்களை எளிதாகத் தெரிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஆப்டிக்கல் இல்யூஷன். ‘இருக்கு ஆனா இல்ல’ என்று கூறுவது போல, ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும். அதே போல இங்கே ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் (மாயை) புகைப்படம் உள்ளது. அதில் உங்களுக்கு முதலில் தெரிந்தது என்ன? நீங்கள் புகைப்படத்தில் முதலில் எதைப் பார்த்தீர்கள் என்பதன் அடிப்படையில், உங்கள் ஆளுமைப் பண்பைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கீழே உள்ள புகைப்படத்தின் உங்களுக்கு எந்த விலங்கின் படத்தை முதலில் பார்த்தீர்கள்?

சரி, தவறு என்பது ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தில் வேறுபாடும். அதே போல, ஆப்டிக்கல் இல்யூஷன் மூலம் தன்னைப் பற்றி வெவ்வேறு கோணத்தில் தெரிந்து கொள்ள முடியும். ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் வெவ்வேறு விதமாக இருக்கும், உங்கள் பார்வையில் நீங்கள் உலகை, குறிப்பிட்ட விஷயங்களை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதே போல, மாற்று கண்ணோட்டம் என்பது மற்றவர்களை விட நீங்கள் எப்படி வேறுபட்டுள்ளீர்கள் என்பதைக் காட்டும். உங்கள் மூளை எப்படி இயங்குகிறது மற்றும் மூளையை எப்படி டிரெயின் செய்யலாம் என்பதையும் ஆப்டிக்கல் இல்யூஷன் சோதனை மூலம் கற்றுக்கொள்ளலாம்.

கீழே உள்ள தவளையின் புகைப்படத்தில் ஒரு குதிரை மறைந்துள்ளது. மறைந்திருக்கும் குதிரை உங்கள் பார்வைக்கு தெரிகிறதா?
பெரும்பாலானவர்களுக்கு தவளையின் தோற்றம் தான் புகைப்படத்தில் தெரிவதாக கூறியுள்ளனர். உங்களுக்கு புகைப்படத்தில் என்ன தெரிந்தது? மீண்டும் ஒரு நன்றாகப் பாருங்கள்.

நீண்ட நேரம் பார்த்தும் குதிரை முகம் தெரியவில்லை என்று யோசனையாக இருக்கிறதா? குதிரை நிச்சயமாக இருக்கிறது. கவனமாக பாருங்கள் மற்றும் உங்கள் பார்வையின் கண்ணோட்டத்தை கொஞ்சம் மாற்றி, மூளைக்கு வேலை கொடுங்கள்.

மீண்டும் முயற்சி செய்தும் குதிரை தெரியவில்லையா? ஒரு சிறிய குறிப்பு: உங்கள் ஃபோன் அல்லது தலையை கொஞ்சம் சாய்த்து மீண்டும் புகைப்படத்தைப் பாருங்கள். இப்போது உங்களுக்கு குதிரை முகம் தெரிகிறதா?
வேறு கோணத்தில் புகைப்படத்தைப் பார்க்கும் போது, குதிரை முகம் தெரியும். குறிப்பைப் படிக்காமலேயே நீங்களே வெவ்வேறு கோணத்தில் படத்தை ஆய்வு செய்து பார்த்து, குதிரை முகம் இருப்பதைக் கண்டு பிடித்துவிட்டால், உங்கள் கண்ணோட்டம் மற்றும் மூளை வேறு கோணத்தில் வெவ்வேறு விதமாக வேலை செய்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அதே போல, நீங்கள் மிகவும் சுலபமாக குதிரை முகத்தைப் பார்த்திருந்தால், நீங்கள் அதிக மன உறுதி கொண்டவர், சுதந்திர மனப்பான்மை உடையவர், வாழ்வில் உங்களுக்கு என்ன சவால் வந்தாலும் அதை நீங்கள் எதிர்கொள்வீர்கள், மற்றும் தடைகளை மீறு சாதிப்பீர்கள் என்று அர்த்தம்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!