நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இத்தனை நாடுகள் ஆங்கிலத்தை தாய்மொழியாக பேசுகின்றனரா?

 உலக நாடுகளை பொறுத்தவரை அமெரிக்காவில் தான் பெரும்பாலான மக்கள் ஆங்கில மொழியை பேசுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.  


  • ஆங்கில மொழி என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.
  • சீன மொழி மற்றும் ஸ்பானிஷ் மொழி தான் பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது.
  • கற்பித்தலில் ஆங்கில மொழி தான் முதன்மையான மொழியாக பயன்படுத்தப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் ஆங்கில மொழி என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது, வணிக தொடர்புக்காக பேசப்பட்ட ஆங்கில மொழி தற்போது கட்டாயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முதன்மையான மொழியாக மாறிவிட்டது.  இன்றைய நாகரீக சூழலில் ஆங்கில மொழியில் பேசுவதையே பலரும் பெருமையான ஒன்றாக பார்க்க தொடங்கிவிட்டனர், அந்தளவிற்கு இம்மொழி பல நாடுகளிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது.  உலகில் அதிகமாக பேசப்படும் தாய்மொழிகளில் ஆங்கில மொழி மூன்றாவது இடத்தை வகிக்கிறது. சீன மொழி மற்றும் ஸ்பானிஷ் மொழி தான் பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது, தற்போது இதற்கு அடுத்தபடியாக ஆங்கில மொழி கோலூன்றியுள்ளது.  17ம் நூற்றாண்டில் தான் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆதிக்கத்தின் மூலம் ஆங்கில மொழி பல நாடுகளுக்கும் பரவியது. 


ஆங்கில மொழி மேற்கு ஜெர்மனிக்கு சொந்தமான மொழி என்று கருதப்படுகிறது, இதில் ஜெர்மனி, நார்வே, டென்மார்க், யுனைட்டட் கிங்டம் ஒன்றை நாடுகளும் அடங்கும்.  400-500CEல் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்த ஜெர்மனிய மூதாதையர்களிடம் இருந்து இந்த ஆங்கிலம் தோன்றியுள்ளது, ஆனால் இது பழமையான ஆங்கில மொழியாக கருதப்பட்டாலும், இவை இன்றைய ஆங்கில மொழி போலவே உள்ளது.  மேலும் இந்த ஆங்கில மொழியானது பன்னிரெண்டாம்-பதினைந்தாம் நூற்றாண்டுகளில் லத்தீன், பழைய நோர்ஸ் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளின் தாக்கத்தால் மிடில் ஆங்கிலமாக உருவெடுத்தது.  அதனைத்தொடர்ந்து 1500களில் மிடில் ஆங்கிலம் நவீன ஆங்கிலம் உருவாக அடித்தளமாக அமைந்தது.  இன்றைய நவீன ஆங்கில மொழியில் அக்ரானிம்ஸ், அப்ரிவேஷன்ஸ், பஞ்சுவேஷன், கேப்பிடலைசேஷன் மற்றும் எமோஜிக்கள் நிறைந்துள்ளன. 


இந்தியா, அமெரிக்கா, யுனைட்டட் கிங்கிடம், கனடா, ஆஸ்திரேலியா, லைபீரியா, அயர்லாந்து, நியூசிலாந்து, ஜமைக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் ஆங்கில மொழியை முதன்மை மொழியாக பேசுகின்றனர்.  ஐக்கிய நாடுகள் சபையால் பயன்படுத்தப்படும் ஆறு அதிகாரபூர்வ மொழிகளில் ஆங்கில மொழியும் ஒன்றாகும், மேலும் இந்த மொழியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஐரோப்பிய ட்ரேட் அசோசியேஷன் மற்றும் பசிபிக் எகனாமிக் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்துகிறது.  பலவகையான அறிவியல் ஆய்வுகளிலும், கற்பித்தலில் ஆங்கில மொழி தான் முதன்மையான மொழியாக பயன்படுத்தப்படுகிறது.  ஒவ்வொரு நாட்டிலும் ஆங்கில மொழி தாய்மொழியாக இல்லாமல் இருப்பினும் பல நாட்டு மக்களும் இதனை பயன்படுத்துகின்றனர், இதுவே இம்மொழிக்கு கூடுதல் சிறப்பினை அளிக்கிறது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!