நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்த படத்தில் மறைந்துள்ள விலங்கு எதுவென்று கண்டுபிடியுங்க பார்க்கலாம்..

இந்த ஓவியத்தை பிரபல ரஷ்ய கார்ட்டூனிஸ்ட்டான வாலண்டைன் டுபினின் என்பவர் வடிவமைத்தார்.
இணையத்தில் பல விதமான செய்திகளும், தகவல்களும் உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் சில நமது ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கும். பொதுவாக இணையத்தில் உள்ள புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதற்கு காரணம் அதில் இடம்பெற்றுள்ள தகவல் தான். சிலவற்றில் நம்மை வியக்க வைக்க கூடிய செய்திகள் இடம்பெறும், அதே போன்று சிலவற்றில் வினோதமான தகவல்களும் இடம்பெறும். சில படங்கள் எந்த வித எழுத்துக்களும் இல்லாமலும் வியப்பானதாக இருக்கும்.

அந்த வகையில் நமது கண்களையும், மூளையையும் ஏமாற்ற கூடிய பல விஷயங்களை சாதாரண புகைப்படங்கள் மூலம் நம்மால் உணர முடியும். குறிப்பாக ஆப்டிகல் இலுஷன் என்கிற முறையை பயன்படுத்தி வரக்கூடிய பல புகைப்படங்கள் மிகவும் புதுமையான வகையில் இருக்கும். ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இலுஷனை உண்மையில் இல்லாத ஒன்றைக் காண நம் கண்களையும் மூளையையும் ஏமாற்றுவதற்கு வடிவமைக்கப்பட்ட முறையாகும்.

இந்த ஆப்டிகல் இலுஷன் முறை என்பது பல நூற்றாண்டுகளாக பழக்கத்தில் இருந்த பழமையான முறையாகும். என்றாலும், அவை இப்போது நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த ஒன்றாக இருந்து வருகிறது. அதன்படி, இந்த பதிவில் காட்டப்படும் படத்தை ஒரு முறை பாருங்கள். இதில் ஒளிந்துள்ள விலங்கு எதுவென்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதை யோசியுங்கள்.

இந்த ஓவியத்தை பிரபல ரஷ்ய கார்ட்டூனிஸ்ட்டான வாலண்டைன் டுபினின் என்பவர் வடிவமைத்தார். இது மிகவும் பிரபலமான ஓவியமாகும். கண் சார்ந்த பரிசோதனைகளுக்கு, இந்த ஆப்டிகல் இலுஷன் படத்தை பயன்படுத்துவார்களாம். உலக மக்கள் தொகையில் 1% மட்டுமே இரண்டு நிமிடங்களுக்குள் இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிக்க முடியுமாம். எனவே நீங்கள் ஒரு முறை இந்த படத்தை உற்று நோக்கி பார்த்து கொள்ளுங்கள். இது ஏதேனும் விலங்கின் உருவம் உங்களுக்கு தெரிகிறதா என்பதை பாருங்கள்.

இந்த வைரல் புகைப்படத்தை அப்படியே பார்த்தால் உங்களுக்கு நிஜமாக எந்த விலங்கின் உருவமும் தெரியாது. அதற்கு மாறாக இதை தலைகீழாக வைத்து பார்த்தால் ஒரு நாயின் உருவம் தெரியும். மேலும் இந்த நாயானது தனது கையில் எலும்பு துண்டு ஒன்றை வைத்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தையும் நீங்கள் காணலாம். அதே போன்று அந்த நாய் நிமிர்ந்து உட்கார்ந்த நிலையில் இந்த புகைப்படத்தில் காட்சி தருகிறது. இந்த நாயின் முடி மற்றும் நீண்ட புதர் காதுகளும் இதில் தெரிகிறது.

அதற்கு பின்னால் அதனுடைய வால் தெரிகிறது. மனிதன் அணிந்திருந்த தொப்பி நாய் உட்காரும் பாயாக இதில் மாறியுள்ளது. முன்னதாக இந்த படத்தில் பார்த்த மனிதனின் முகம் தற்போது தலை கீழாக பார்க்கும் போது நாயின் உருவமாக தோன்றுகிறது. இதை தான் ஆப்டிகல் இலுஷன் என்று சொல்வார்கள். இது பல நேரங்களில் மிகவும் வேடிக்கையாகவும் இருக்கும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!