நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எலும்புகள் தேய்மானத்தை குறைக்கும் ஒரு உணவு பொருள்! மூட்டு வலிக்கு குட்பை

 புளிப்புச்சுவை உடலுக்கு மிக தேவையான ஒன்றாகும். இதை நமக்கு மிகச்சரியான அளவில் கொடுக்கும் ஒரு பொருள் தான் புளி. 

நம்முடைய முன்னோர்கள் புளியை அன்றாட உணவில் வெறும் சுவைக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று எண்ணி, நாமும் பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால் புளிக்குள் ஒளித்திருக்கும் ஏராளமான மருத்துவ உண்மைகளைப் பற்றி நாம் அறிந்து கொண்டதே இல்லை.

மூட்டுவலியைப் போக்கும் ஆற்றல் புளிக்கு உண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.


முதலில் நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு புளியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும். அதிகபட்சமாக 100 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.

புளி எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்கும் தன்மையுடையது. அதனால், எலும்புகளின் தேய்வால் உண்டாகும் மூட்டுவலி விரைவிலேயே கட்டுக்குள் வரும். 100 கிராம் புளியில் ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற இரும்புச்சத்து முழுமையும் கிடைக்கிறது.

அதேபோல், ஜீரணக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு ஆற்றல், உடலின் ரத்த ஓட்டம் உள்ளிட்டவைகளை புளி சீராக்குகிறது.

மேலும், உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. அதோடு உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளைக் கரைக்கும் சக்தியும் புளிக்கு உண்டு.

புளியை நன்கு கரைத்து கொண்டு அதனோடு சிறிது செம்மண், சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் போது பற்றுபோட மூட்டு வீக்கம், கீல்வாதம், மூட்டுகளில் சவ்வு கிழிதல், மூட்டு ஜுரம் போன்ற நோய்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.


also read : உங்கள் முகத்தில் தேவையில்லாத முடி இருக்கிறதா? இதனை எப்படி எளியமுறையில் போக்கலாம்?


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்