சோறு கண்ட இடமே சொர்க்கம்... உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? ஷாக் ஆயிட்டாதீங்க
- Get link
- X
- Other Apps
நம்முடைய பாட்டி, தாத்தா தொட்டதற்கு எல்லாம் ஒரு பழமொழி சொல்லி பாராட்டுவார்கள் அல்லது திட்டுவார்கள்.
அதில் சில சுவாரஸ்யமாக இருக்கும் சில எதுக்குடா வாயக்கொடுத்து மாட்டிக்கிட்டோம் என்பது போல இருக்கும்.
அப்படி ஒரு பழமொழியின் அர்த்தத்தை தான் இன்று தெரிந்து கொள்ள போகின்றீர்கள்.
உண்மையில் இந்த பழமொழி ஏன் வந்தது தெரியுமா?
சிவலிங்கத்துக்கு ஐப்பசி பவுர்ணமியன்று வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் செய்வர்கள்.
இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றார்கள். பிற்காலத்தில், இந்த சுலவடையை, நீண்டநாள் தங்கும் விருந்தாளிகளைக் கேலி செய்வதற்கு பயன்படுத்தி விட்டார்கள்.
அன்னம், பரபிரம்மம் என்பர். அதாவது, உணவே தெய்வம் என்பது இதன் பொருள்.
உணவே தெய்வம்
இதனால் தான், சமையல் செய்யும் போது, கெட்ட எண்ணங்களைத் தவிர்த்து, நல்ல எண்ணங்களுடன் சமைக்க வேண்டும் என்று கூறுவர்.
சமையலின் போது, மனதில் எந்த மாதிரியான எண்ணங்கள் ஓடுகிறதோ அது, சமைக்கும் உணவிலும் பிரதிபலிக்கும்.
அந்த உணவை சாப்பிடுவோருக்கும் அந்த எண்ணங்களின் தாக்கம் பாயும். இப்படி நல்ல எண்ணங்களுடன், மந்திரங்கள் சொல்லி சமைக்கப்படும் உணவைத் தான், கோவில்களில் சுவாமிக்கு படைக்கின்றனர்.
கோவில் மடப்பள்ளியில் சமைப்பவர் மனதில் எந்தவித வக்ர எண்ணங்களும் இல்லாமல் சமைத்தால் அதை கடவுள் ஏற்றுக்கொள்வார்.
இல்லையெனில் கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பர்.
இதற்காகத்தான், அன்னத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில், சிவாலயங்களில், அன்னாபிஷேகம் எனும் விழாவையே உருவாக்கினர்கள்.
இப்போது புரிகின்றதா எப்படி சோறு கண்ட இடம் சொர்க்கமாயிற்று என்ற பழமொழி வந்தது என்று.
ALSO READ : ஆண்-பெண் உடல் அமைப்பில் மாறுபட்டிருக்கும் அம்சங்கள்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment