நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வாய் துர்நாற்றமா? கவலையை விடுங்க.. அதனை போக்க உதவும் சில எளிய குறிப்புகள் இதோ.........

 பொதுவாக சில பேருக்கு தினசரி பல் துலக்கி பற்களை பராமரித்து வந்தால் கூட வாய் துர்நாற்றம் என்பது சரி செய்ய முடியாத பிரச்சினையாக இருக்கும்.

இதனால் அவர்கள் பொது இடங்களில் நிறைய சங்கடத்திற்கு உள்ளாவார்கள். மற்றவர்களின் கேளிக்கைக்கு ஆளாவார்கள்.

வாய் துர்நாற்ற பிரச்சினை பல காரணங்களால் உண்டாகிறது. குறிப்பாக ஈறு கோளாறுகள், தவறான பற்களின் சுகாதாரம் மற்றும் மாவுப் பொருட்களால் பூசப்பட்ட நாக்கு இவற்றால் ஏற்படுகிறது என்கிறார் பல் மருத்துவர்.

எனவே இவற்றை நீக்க ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.


  • தினமும் இரண்டு முறை காலை மற்றும் இரவு தூங்கும்முன் பல் துலக்குவது பல் இடுக்குகளில் தங்கியிருக்கும் உணவுகளையும், அழுக்குகளையும் பொருள்களை சுத்தப்படுத்த உதவும். இதனால் நாற்றம் ஏற்ப்படாது.

  • கிராம்பு அல்லது சீரகம் மென்று வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம். எலுமிச்சை சாறுடன் நீர், சிறிது உப்பு கலந்து குடித்து வரலாம். இதில், வாய்கொப்புளித்தாலும் நாற்றம் நீங்கும்.

  • குடலில் ஏற்படும் பிரச்சனையால்தான் வாயில் நாற்றம் ஏற்படுகிறது. அதற்கு, தினமும் காலையில் 4 டம்ளர் தண்ணீர் வெறும் வயிற்றில் குடித்து வர வயிறு சுத்தப்படும், அல்சரும் நீங்கும், வாய் நாற்றமும் மாறும்.

  • தினமும் உணவு உண்ட பிறகு ஆப்பிள், கேரட் போன்ற காய்கறி மற்றும் பழ வகைகளை உண்பதால் வாய் துர்நாற்றம் நீங்கும். இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிப்பதோடு எச்சில் சுரப்பதையும் அதிகரிக்க செய்யும்.

  • கொத்தமல்லி கீரையை வாயில் போட்டு மென்றால் வாய் நாற்றம் மாறும். சிறிது லவங்க பட்டையை நீரில் காய்ச்சி மிதமான சூட்டில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.  





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!