உங்களுக்கு எதனால் முடி கொட்டுகிறது என்கிற காரணத்தை முதலில் தெரிந்து கொண்டு அதற்கேற்ப நம் உணவிலும் பண்புகளிலும் சிறுசிறு மாற்றங்கள் செய்தால், முடி கொட்டுதலுக்கு முடிவு கட்டிவிடலாம்.
இன்று மனிதர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்சனைகள் அதிகம் இருக்கின்றன. அவற்றில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது, தலைமுடி உதிர்வதும், வழுக்கை விழுவதும்! இன்று ஆண்களுக்கு மட்டுமல்ல…. பெண்களுக்கும் முடி உதிர்வு அதிகமாகி, வழுக்கை விழுவது அதிகமாகி வருகிறது.
உங்களுக்கு எதனால் முடி கொட்டுகிறது என்கிற காரணத்தை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதிலிருந்து விடுபட அதற்கேற்ப நம் உணவிலும் பண்புகளிலும் சிறுசிறு மாற்றங்கள் செய்தால், முடி கொட்டுதலுக்கு முடிவு கட்டிவிடலாம்.
முடி உதிர்வுக்கான காரணங்கள்…..
பரம்பரையாக முடி கொட்டுதல் என்பது ஒரு காரணம் என்றாலும், நாம் நமது பண்புகளை மாற்றிக் கொள்வதன் மூலம் நிச்சயமாக இதை ஜெயிக்க முடியும். ஆம், பரம்பரையாக செய்த சில தவறுகளை முத்திரைகள் மூலமே சரி செய்ய முடியும்.
உடல் சூடு
உடலில் அதிகமான உஷ்ணம் காரணமாக பிட்யூட்டரி, பீனியல் சுரப்பி ஒழுங்காக சுரக்காமல், அதில் சில குறைபாடுகள் ஏற்படுவதால் முடி கொட்டுகிறது.
அதிக சிந்தனை
தொடர்ந்து காலை முதல் இரவு வரை அதிகமாக சிந்தித்த வண்ணம் இருப்பவர்களுக்கு முடி கொட்டும். பொதுவாக பெரிய நிறுவனங்களில் உயர் பதவியில் உள்ளவர்களின் தலை முடி முழுக்கக் கொட்டி, வழுக்கையாகத்தான் இருக்கும். இவர்கள் தொடர்ந்து மூளைக்கு அதிக வேலை கொடுப்பதால் மூளை நரம்புகள் கொதிப்படைந்து இப்படி நிகழ்கிறது.
தூக்கமின்மை
பலருக்கும் ஆழ்ந்த நித்திரை இருக்காது. அதனால் மன அழுத்தம், மனச்சோர்வு, நரம்பு பலவீனம் உள்ளிட்டவை ஏற்படுகிறது. இதனால் முடி கொட்டும். உதிர்ந்த முடியானது வளராமல் இருக்கும்.
உணவு
நாம் சாப்பிடும் உணவு மிகவும் காரமாக இருந்தாலோ, எண்ணெய்ப் பண்டங்கள் அதிகமாக எடுத்தாலோ, மாமிசம் அதிகமாக உட்கொண்டாலோ, உடலில் நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்காக சுரக்காது. இதனால் முடி கொட்டக்கூடிய நிலை ஏற்படுகிறது.
பகல் தூக்கம்
பகலில் சாப்பிட்டதும் பலருக்கும் தூங்குவது வழக்கம். இதனாலும் முடி கொட்டும். அதேபோல் கணவன் / மனைவி அளவுக்கு மீறி அடிக்கடி தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டாலும் சுரப்பிகளில் மாறுபாடு ஏற்பட்டு, முடி கொட்டும்.
எண்ணெய் தேய்த்துக் குளித்தல்
ஆண்கள் வாரம் ஒருமுறை சனி / புதனும், பெண்கள் செவ்வாய் / வெள்ளியும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அப்படிக் குளிக்காதவர்களுக்கு உடல் மற்றும் மன உஷ்ணத்தினால் சுரப்பிகள் சரியாக சுரக்காமல் முடி கொட்ட ஆரம்பிக்கும்.
குளிக்கும் தண்ணீர்
உப்புத் தண்ணீரில் தொடர்ந்து குளிப்பதாலோ, அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் தண்ணீரை மாற்றி மாற்றி குளிப்பதாலோ அவர்களின் உடலில் சுரப்பிகளின் மாற்றத்தால் தலைமுடி கொட்டும்.
Comments
Post a Comment